தேக்கம்

850 123 99
                                    

மார்ச்சுவரியின் அந்த துரு பிடித்த கதவு திறந்த போது நரகத்தின் வாசல் திறந்ததாகவே உணர்ந்தாள் காயத்ரி. ஒரு இனம் புரியாத பயம், அவள் ரத்தம் எங்கும் பரவி உஷ்ணமாக்கியது. மெல்ல அந்த அறைக்குள் நுழைந்தாள். அங்கு நிலவிய குளிர் இவளை அணைத்துக் கொண்டது. தரை முதுழுவதும் ஈரம் தண்ணீரா ரத்தமா என பார்க்க அவள் துணியவில்லை. அட்டென்டர் அஸிஸ்டென்ட் வேறு ஆரம்பத்திலிருந்து இவளை வெறித்துப் பார்த்தவாறே வந்து கொண்டிருந்தான்.

"வாசு.. கொஞ்சம் பக்கத்துலயே இருப்பா.."

"ஓகே மேடம்.." என்றான் வாசு. அவன் குரலிலும் சிறு கலக்கம் தெரிந்தது, அவனுக்கும் அதுதான் முதல் முறையாக இருக்குமோ!

"கைல ஏதாச்சும் அனுமார் டாலர் வச்சிருக்கியாப்பா.."

"நான் கிறிஸ்டியன் மேடம்"

"கிறிஸ்டியனா..? பேர் வாசுன்னு இருக்கு.." இப்போது தான் அவன் முகத்தை பார்த்தாள், அவன் முகத்திலும் அதே பயம் தெரிந்தது.

"அது லவ்ஸ் மேட்டர் மேடம்.." குழைந்தான் வாசு, " மதம் மாத்திக்கோ இல்ல ஆள மாத்திக்கோனு சொன்னாங்க. அதான்.." இழித்தான்.

"அது சரி.. இருந்துட்டு போட்டும்.. சிலுவை இருந்தா கூட கொடேன் .."

"அதுவும் கொண்டு வரலியே மேடம்.." அவன் முடிப்பதற்குள் அஸிஸ்டென்ட் குறுக்கிட்டான்.

"என்ன மாடம் மெரிசிலாயிடரடீங்களா.. அல்லாம் டெட் பாடிங்கோ தான், எந்திச்சுகினு வாராது பிரியா இருங்கோ ஹிஹிஹி..." இவன் சிரிப்பிற்கு பேயே தேவலாம் போல இருந்தது காயத்ரிக்கு.

ஆனால் அவன் நிறுத்துவதாய் இல்லை,
"லைப்ல ஒரு டோர லாக் பண்ணுணாக்கா ஆண்டவன் இன்னோரு டோர ஓபன் பண்ணுவானாம் எங்க ஆயா சொல்லிக்குது... மனசு உட்றாதீங்கோ.. என் பேரு கூட ரங்கநாதன் தான்... " அவன் ஜொள்ளு வாயை கடந்து வார்த்தைகளில் தொற்றி காயத்ரி காது வரை நனைத்தது.

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Where stories live. Discover now