மித்ரன்

1.4K 178 96
                                    

"கதவ தாள் போடலியா நீ.. இப்போ அவன் வந்துட்டான் பாரு" டென்ஷனானாள் மேரி

"என்னக்கா . நம்ம வீட்ல அவன் நுழையற மாதிரி டென்சன் ஆவுறீங்க, இது அவன் வீடுக்கா.. மறந்துட்டீங்களா..!" என்றாள் நிசா.

"ங்ங்ர்ர்ர்ர்...." என ஸ்டார்ட் ஆகாத கார் போல உறுமி விட்டு
"எங்கேயாச்சும் போய் ஒழிஞ்சுக்கோ.. மாட்டிக்காத சான்ஸ் கிடைக்குறப்போ நாம எஸ்கேப் ஆயிடலாம்.." கூறி நகர்ந்தாள் மேரி.

'இப்போ தான் அந்த நாய்ட்ட இருந்து தப்பிச்சோம், அடுத்து இந்த நாயா.. ஆண்டவா..' என்று எண்ணிக் கொண்டே ஒழிய இடம் தேடினாள் நிசா.

ஒரு வழியாக ப்ரிட்ஜ்க்கு பின்னால் இருந்த சிறு இடத்தில் தன்னை அடைத்துக் கொண்டாள்,
ஆனால் அதே இடத்தில் இவளுக்கு முன்பே ஹிட் க்கு பயந்த கரப்பான் பூச்சி கூட்டமும் ஒளிந்திருந்தது இவளுக்கு தெரியவில்லை பாவம்.

டக் .. டக் .. என காலடி சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வரத் தொடங்கியது. அந்த சத்தம் உச்சத்தை அடைந்த போது திடீரென நின்று போனது. ஆம் ப்ரிட்ஜ் க்கு அருகில் வந்து தான் நின்று போனது , வெளியே சென்று விட்டு வரும் அனைவரும் முதலில் நாடும் இடம் , ப்ரிட்ஜ் தான் . இந்த சின்ன விசயம் கூட புரியாத முட்டாளாகி விட்டோமே..! என நிசா தன்னையே திட்டிக் கொண்டாள்.
மித்ரன் ப்ரிட்ஜ் திறந்து என்னவோ செய்து கொண்டிருந்தான் . அவன் அங்கு நின்று கொண்டிருந்த ஒவ்வொரு நொடியும் , நிசாவுக்கு ஒரு யுகமாக தெரிந்தது . ஸ்டெதஸ் கோப் வைக்காமலே இதயம் துடிப்பது கேட்டது, மூச்சு விடுவதை கூட நிறுத்தி விட்டாள். எப்படியாவது என்னை காப்பாற்றி விடு என்று தன் குல தெய்வத்தையெல்லாம் வேண்டிக் கொண்டாள், அவள் குல தெய்வம் உண்மையிலே பவர்புல் தான் போல , அவள் வேண்டிய அடுத்த நொடியில் ப்ரிட்ஜை மூடி விட்டு மித்ரன் அங்கிருந்து நகர்ந்தான்.
அடக்கி வைத்த மூச்சையெல்லாம் , ஓட்டை போட்ட டயர் போல உஷ்ஷ்ஷ்... என ஒரே வீச்சில் விட்டு முடித்தாள். பயத்தில் கண் கலங்கி கண்ணீர் முட்டிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரம்.. எப்படியாவது தப்பி விடலாம்.. வீட்டை விட்டு வெளியேறினால் போதும் , தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாள். அவளின் அவல நிலை கண்டு இரக்கமுற்றதோ .. என்னவோ.. ஒரு கரப்பான் பூச்சி தன் நீண்ட மீசையால் அவள் கன்னத்தை வருடியது, அடுத்த நொடி "வீவீவீவீல்ல்ல்ல்ல்ல்....." என்று கத்திக் கொண்டு வெளியே வந்து விழுந்தாள் நிசா. துடித்து எழுந்து உடலெங்கும் தட்டி விட்டாள். கரப்பான் பூச்சி எங்குமில்லை என்று கன்பார்மான பிறகே திரும்பினாள், அங்கே லேம்ப் போஸ்ட் போல ஆறு அடியில் நின்று கொண்டிருந்தான் வீட்டின் ஓணரான மித்ரன்.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் ஆனால் எதுவும் பேசவில்லை , அங்கே ஒரு சிறிய அமைதி. அந்த சில நொடிகளில் பல ஆண்டுகள் யோசித்து விட்டாள் நிசா. பரீட்சை நேரத்தில் மறந்து போன ஆன்சர் போல சமாளிக்க எந்த ஐடியாவும் கிடைக்கவில்லை அவளுக்கு. உண்மையை ஒப்புக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து அவன் காலை தேடிய தருணம், அந்த மௌனத்தை கலைக்கும் விதமாக ,
"ஹலோ சார்..! " என ஒரு குரல் கேட்டது, உற்சாகமாக என்ட்ரி கொடுத்தாள் மேரி.

"ஹலோ சார்.. ஹாப்பி பர்த் டே" சிரித்துக் கொண்டே உள்ளே வந்தாள் மேரி.

நிசா வாயை கொசு வத்தியே புகுமளவிற்கு அதிர்ச்சியில் திறந்து வைத்திருந்தாள்.

மித்ரன் தன் பார்வையை மேரி பக்கம் திருப்பினான்
"எனக்கு இன்னைக்கு பிறந்த நாள் இல்ல.."

"ஓ சேட் (sad) .. அப்படியா.." உண்மையாகவே அதிர்ச்சி ஆனது போல நடித்தாள் மேரி
"ச்சே.. சரப்ரைசா விஷ் பண்லாம்னு நினைச்சோம்.. இப்படி சொதப்பிடுச்சே..  எவரி இயர் வீ டூ சர்ப்ரைஸ பார்ட்டி , ஏன்டி " நிசாவை லேசாக இடித்தாள் .

"விடுங்க சார் .. உங்க பர்த்டே அப்ப மறக்காம சொல்லிருங்க.. சர்ப்ரைசா விஷ் பண்ணி கலக்கிடுவோம்" சாதாரணமாக சிரித்தாள்
"இப்ப கிளம்புறோம்..வாடி வாடி .." நைசாக அங்கிருந்து நகர்ந்தாள் நிசாவையும் இழுத்துக் கொண்டு.

"எங்க போறீங்க .. மேடம்" மித்ரன் குரல. இறுக்கமானது.

இதற்கு மேல் பொறுக்க முடியாது , அடிச்சு நொறுக்கிட வேண்டியது தான் என நினைத்து கொண்டு கைகளை கராத்தே பஞ்சுக்காக இறுக்கிக் கொண்டு துணிச்சலாக அவனை நோக்கி திரும்பினாள்.

மித்ரன் கையிலிருந்த துப்பாக்கி சுடாமலே அவள் துணிவை துளைத்தது.

P.S: மித்ரனிடமிருந்து இவர்களை காப்பாற்ற யாருமேயில்லையா..? ஏன் இல்லை .. நம்ம ஶ்ரீரங்கத்து சுனாமி காயத்ரி மாமி இருக்கிறாளே.. கராத்தே பயனழிக்காவிட்டாலும் காயத்ரி குங்பூ பாண்டாவாக இவர்களை காப்பாற்ற மாட்டாளா..? பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில் .

Pls provide your valuable thoughts in the comments , that would make my day special and happy pongal to all :)

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Where stories live. Discover now