வேணுமா வேணாமா

196 29 34
                                    

uemt 14

மணி - டேய் ஏன்டா இப்படி உயிரை வாங்குற

கதிர் - உனக்கெல்லாம் கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லையா

மணி - இப்ப நான் என்னடா பண்ணேன்...ஏன்டா இப்படி கத்துற

கதிர் - நீ உன்னுடைய காதலிக்கு பணம் வாங்கி கொடுத்த....அந்த பணத்தை நீ அடைக்கிறனா அதுல ஒரு அர்த்தம் இருக்கு காரணமே இல்லாம ஊர் பேர் தெரியாத ஒரு பொண்ணு கிட்ட பணம் வாங்குறியே உனக்கு அசிங்கமா இல்ல

மணி - டேய் முல்லை ஒன்னும் ஊர் பேரு தெரியாத பொண்ணு இல்ல டா அவ நம்ம முல்லைடா

கதிர் - என்னது நம்ம முல்லையா... என்ன அவ உன் தம்பி பொண்டாட்டின்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா

Author - future ல நடக்கும் இல்ல....🏃‍♂️

மணி - இங்க பாரு நான் நினைக்கிறது இருக்கட்டும்... எனக்கு இப்ப அவசரத்துக்கு பணம் வேணும்னு நான் பேசிகிட்டு இருக்கும்போது அவ கிட்ட பேங்க்ல பணம் சும்மா தான் இருக்குன்னு அவ தான் சொன்னா...சரி கைமாத்த வாங்குனா ஒரு மாசத்துல கொடுத்திடலாமேனு கேட்டேன் இதுல என்னடா தப்பு இருக்கு

கதிர் - எனது என்ன தப்பு இருக்கா...உன்ன சொல்லி குத்தம் இல்ல பேங்க்ல பணம் இருக்குது வீட்டுல நகை இருக்குதுன்னு.....பேசுற கொஞ்சம் நாள்ல்ல அவளுடைய முழு ஹிஸ்டரியும் உன்கிட்ட சொல்லி இருக்கிறா பாரு அவளை சொல்லணும்

மணி - டேய்

கதிர் - இங்க பாரு நீ முல்லை கிட்ட காசு வாங்க கூடாது

மணி - நீ எதுக்குடா அதை சொல்ற அந்த பொண்ணு என்னை அவளுக்கு அண்ணனா நினைக்கிறா.

கதிர் - இன்னும் கேட்டா நீ அவள தங்கச்சியா நினைக்கிறனால தான் உன்னை காசு வாங்க வேண்டாம்னு சொல்றேன்

மணி - டேய் இப்ப எனக்கு 25000 தேவைடா நான் என்னடா பண்றது

கதிர் - ம் போயி உன்கிட்ட இருக்கிற கிட்னியை வித்துரு போ

சிவம் - என்னப்பா கதிர், ஏம்பா கோபப்படுற

கதிர் - என்ன தாத்தா நீங்க நான் கோபப்படுறது தப்புன்னு நீங்க சொல்லுங்க இந்த நிமிஷம் நான் கேட்டுக்குறேன்... எப்படி தாத்தா இன்னொரு பொண்ணு கிட்ட இவரு காசு கேட்கலாம்...அதுவும் ஒரு ரூபா இரண்டு ரூபாய் இல்ல 25 ஆயிரம்னா என்ன சும்மாவா...அந்த பொண்ணு பழகுற தோஷத்திற்காக பேங்க்ல இருக்கிற காசை இந்த ஆள் கிட்ட எடுத்து கொடுத்தா அவங்க அம்மா அப்பா ஏன் எதுக்குன்னு கேக்க மாட்டாங்க...இந்த ஆளுக்கு அதெல்லாம் புரியவே இல்ல

💙உன்னில் என்னை மறக்கத்தான்💙Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin