1 விதி

4.4K 64 11
                                    

1 விதி

மதுரை

தனது கைபேசி கம்பெனியின் புதிய கைபேசிகளின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுரைக்கு வந்திருந்த தூயவன், ஹெலிகாப்டரில் இருந்து அலட்டலாய் இறங்கினான். உண்மையை கூறப்போனால், அவன் அலட்டிக் கொள்ளவே இல்லை. அவனது உடல் மொழி, பார்ப்பவரை அப்படி எண்ண வைத்தது. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் கொண்ட அவனது உடல் மொழி அத்தகையது.

அந்த நிகழ்ச்சி மதுரையின் திறந்தவெளி மைதானம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரம்மாண்டமான ஏற்பாடுகள் முடிந்த நிலையில், நிகழ்ச்சி துவங்க தயாராக இருந்தது அந்த மிகப்பெரிய மேடை. அந்த மேடையில் செய்யப்பட்டிருந்த விளக்கு அலங்காரங்கள் அங்கு வந்திருந்தவர்களை வாயை பிளக்க செய்தது. அறிமுகம் செய்யபட இருந்த கைபேசியின் நிறங்களுக்கு ஏற்ப, அந்த மேடையின் விளக்குகளின் வண்ணம் மாறிக் கொண்டே இருந்தது.  அப்படி ஒரு கோலாகல கைபேசி அறிமுக நிகழ்ச்சியை இதற்கு முன் மதுரை நகரம் கண்டதில்லை.

நிகழ்ச்சி ஆரம்பமானது முதல், முன் வரிசையில் அமர்ந்து அந்த நிகழ்ச்சியை பார்வையிட தொடங்கினான் தூயவன்.

இந்தியாவின் பிரசித்தி பெற்ற மாடல்கள் அவனது நிறுவனத்தின் புதிய கைபேசிகளை தங்கள் கையில் ஏந்திய வண்ணம், ஒய்யார நடை நடந்து, அவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள்.

அந்த மாடல்கள் அனைவரும் சிகப்பு நிற உடைகளையே அணிந்து இருந்தார்கள். ஏனென்றால், அது தூயவனுக்கு பிடித்த நிறம். அது தான் அவனுக்கு பிடித்த நிறம் என்பதே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஏனென்றால், அவனது அலுவலக மற்றும் வீட்டின் அறைகள் வெறும் கருப்பும் வெள்ளையுமாகத் தான் காட்சி அளிக்கும்.

அவனுக்கு பிடித்த நிறம் சிவப்பாக இருந்தாலும் கூட, அந்த மாடல்கள் அந்த சிகப்பு நிறத்தை அணிந்து வந்தாலும் கூட, அவர்கள் யாரும் அவனது கருத்தை கவர்ந்ததாய் தெரியவில்லை. ஒரு சாதாரண பார்வையாளர் போலத் தான் அவன் அந்த நிகழ்ச்சியை பார்வையிட்டுக் கொண்டிருந்தான். உயிர்களை இல்லாத, செயற்கையான புன்னகையை தாங்கிய அந்த மாடல்களின் முகங்களை பார்க்கவே அவனுக்கு வெறுப்பாய் இருந்தது.

என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)Where stories live. Discover now