37 தூயவனின் விருப்பம்

610 57 10
                                    

37 தூயவனின் விருப்பம்

"நான் உங்களைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்று கூறிய பவித்ராவை பார்த்து நேசமாய் புன்னகைத்தான் தூயவன்.

"உங்களுக்கு ஏதாவது வேணுமா?" என்றாள் பவித்ரா சங்கடத்துடன்.

"இப்போதைக்கு எனக்கு எதுவும் வேணாம். எனக்கு வேண்டியது கிடைச்சிடுச்சு" என்று பளிரென சிரித்தான்.

வெண்மதியும் குணமதியும் வருவதை அவர்கள் பார்த்தார்கள். அவர்களை பார்த்து புன்னகைத்தாள் பவித்ரா.

"மாம், பவித்ரா உண்மையிலேயே என்னை கல்யாணம் பண்ணிக்க தயாராக இருக்கா" என்றான் தூயவன் சிரித்தபடி.

"அப்படியா?" என்று பவித்ராவின் தோளைத் தொட்டார் குணமதி.

ஆம் என்று சங்கடத்துடன் தலையசைத்தாள் பவித்ரா.

"அவங்க தான் ஏற்கனவே எல்லாரும் முன்னாடியும் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாங்களே!" என்றாள் வெண்மதி.

"அவ அப்ப சொன்னது உண்மை இல்லயாம் கா. சஞ்சனாவோட வாயை அடைக்க தான் அப்படி சொன்னாளாம்" என்றான் கிண்டலாக.

"நெஜமாவா? அதை நீங்க முழு மனசோட சொல்லலயா?"

"இல்லக்கா... ஆமாம் கா... இல்ல... நான் அப்படி சொல்லல..." உளறினாள் பவித்ரா.

"அக்கா, ப்ளீஸ், அவளை கன்ஃபியூஸ் பண்ணாதீங்க. இப்ப தான் ரொம்ப கஷ்டப்பட்டு நான் அவளை ஒத்துக்க வச்சிருக்கேன். நீங்க குழப்பினீங்கன்னா அவ முடியாதுன்னு சொல்லிட போறா" என்று சிரித்தான் தூயவன்.

அவன் சிரிப்பதை மூவரும் வியப்போடு பார்த்தார்கள்.

"நம்ம தூயாவுக்கு அவனோட எனர்ஜி திரும்ப வந்துடுச்சு போல இருக்கே" என்றார் குணமதி.

"முழுசா இன்னும் திரும்பி வரல" என்றான் பவித்ராவை பார்த்தபடி.

"அது முழுசா திரும்பி வரணும்னா நாங்க என்ன செய்யணும்?"

"கல்யாணம்"

என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)Where stories live. Discover now