48 சமையலறையில் சஞ்சனா

766 50 9
                                    

48 சமையலறையில் சஞ்சனா

சந்தோஷுடன் இருந்த சஞ்சனாவை அழைக்க சென்றார் குணமதி.

"மாப்பிள்ளை, நான் உங்க தங்கச்சியை என்னோட கூட்டிக்கிட்டு போகலாமா?" என்றார்.

சஞ்சனாவை ஏறிட்ட சந்தோஷ், சரி என்று தலையசைத்தான்.

"கவலைப்படாதீங்க. நான் அவளை கிச்சனுக்கு தான் கூட்டிக்கிட்டு போறேன். நம்ம வீட்ல வேலை செஞ்சுகிட்டு இருந்தவங்க, அவங்க ஊர்ல ஒரு துக்கத்துக்காக போயிருக்காங்க. எனக்கு ஹெல்ப்க்கு யாருமே இல்ல. அதனால தான் கிச்சன்ல யாராவது ஒருத்தர் வேணும்னு அவளை கூட்டிக்கிட்டு போறேன்" என்று சஞ்சனாவின் முகத்தை கவனித்தபடி கூறினார் குணமதி.

அவளது முகத்தில் அதிர்ச்சி தாண்டவம் ஆடியது. சமையலறையில் வேலை செய்யவா அவர் அவளை அழைக்கிறார்? என்ன தைரியம் அவருக்கு!

"அவ இங்க தங்குறதுக்கு நீங்க தானே ஆன்ட்டி பர்மிஷன் கொடுத்தீங்க... நீங்க அவளை எங்க வேணா கூட்டிக்கிட்டு போகலாம்" என்றான் சந்தோஷ்.

"தேங்க்யூ" என்று சஞ்சனாவை ஏறிட்ட குணமதி,

"நம்ம போகலாமா?"

"எனக்கு ஒண்ணுமே தெரியாதே"

"ஆன்ட்டி உனக்கு சொல்லிக் கொடுப்பாங்க" என்றான் சந்தோஷ் குணமதி எதுவும் சொல்வதற்கு முன்.

புழுங்கியபடி அவருடன் சென்றாள் சஞ்சனா.

"எப்போ உங்க வீட்டு வேலைக்காரங்க அவங்க ஊருக்கு போனாங்க?"

"இன்னைக்கு காலையில தான் போனாங்க. எனக்கு ஹெல்ப்புக்கு யாருமே இல்லன்னு நான் ரொம்ப கவலையோட இருந்தேன். நல்ல காலம் நீ வந்துட்ட" என்று தன் சிரிப்பை அடக்கியபடி கூறினார் குணமதி.

"உங்க கூட கிச்சன்ல வேலை செய்யறதுக்காக தான் நான் இங்க இருக்க பர்மிஷன் கொடுத்தீங்களா?" என்றாள் நம்ப முடியாமல்.

"வேற எதுக்கு கொடுத்தேன்? வெண்மதியும் பவித்ராவும் புதுசா கல்யாணம் ஆனவங்க. அவங்க புருஷனோட இருக்கணும்னு விரும்புவாங்க. நான் எப்படி அவங்களை டிஸ்டர்ப் பண்ண முடியும்? அவங்க மனசு கஷ்டப்பட மாட்டாங்களா?" என்றார்.

என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)Where stories live. Discover now