21 தேவதை
தூயவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட குணமதி, பவித்ராவை நோக்கி சென்று, அவளை அணைத்துக் கொண்டார்.
"தேங்க்யூ சோ மச், பவித்ரா. என் வாழ்க்கையோட விடியல் உன் மூலமா கிடைக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல" என்று உணர்ச்சிவசப்பட்டு பவித்ராவை சங்கடத்திற்கு ஆளாக்கினார்.
அவள் நெற்றியில் முத்தமிட்டு,
"எங்க வாழ்க்கையில வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றார்.
பவித்ரா சங்கடத்தில் நெளிய, தூயவனும் வெண்மதியும் புன்னகையோடு நின்றார்கள்.
"மாம், எனக்கு பசிக்குது. எனக்கு ஏதாவது குடுங்க" என்றான் தூயவன்.
"வா போகலாம்" என்று அவர்கள் உணவு மேசையை நோக்கி நடந்தார்கள்.
"நேத்து உனக்கு பசிச்சப்போ, நீ யாரை பா சாப்பாடு கேட்ட?" என்றாள் அவர்களை பின்தொடர்ந்த வெண்மதி, கிண்டலாய்.
அவளுக்கு பதில் அளிக்காமல் புன்னகையுடன் நடந்தான் தூயவன்.
இதற்கிடையில்...
மாதேஷ் கோபத்தில் வெந்து கொண்டு இருந்தார். சஞ்சனாவோ விடாமல் அழுது கொண்டிருந்தாள்.
"இப்போ எதுக்காக அழற? இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம். வெண்மதி உன் மேல கடுமையான கோவத்துல இருக்கா. அதனால தான், கொஞ்சம் கூட தயங்காம, மூஞ்சில அடிச்ச மாதிரி முடியாதுன்னு சொல்லிட்டா"
"என்னை தூயவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி கேட்க மாட்டேன்னு இவர் எப்படி சத்தியம் பண்ணலாம்?" என்று அங்கு நின்றிருந்த சந்தோஷை சுட்டிக்காட்டி பைத்தியம் போல் கத்தினாள் சஞ்சனா.
"நீ அப்படி செஞ்சிருக்க கூடாது சந்தோஷ்"
"ஏன் செஞ்சிருக்க கூடாது? என்னோட கல்யாணத்தை பத்தி பேசி முடிவெடுக்க தானே நம்ம அங்க போனோம்? நம்ம ஒன்னும் தூயவனுக்கும் சஞ்சனாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சுக்கிட்டு அங்க போகலையே...! நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோங்க. தூயவனுக்கு சஞ்சனாவை சுத்தமா பிடிக்கல. வெண்மதிக்கும் அவங்க கல்யாணம் நடக்கிறதுல விருப்பம் இல்ல. குணமதி ஆன்ட்டிக்கும் அப்படித்தான். அப்படி இருக்கும் போது, எதுக்காக நீங்க இவ்வளவு அடம் பிடிக்கிறீங்க? தூயவன் ஒன்னும் தன் வாழ்க்கையில நடக்கிறத எல்லாம் அப்படியே ஏத்துக்குறவன் கிடையாது. நான் வெண்மதியை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பண்ணிக்கலனாலும் அவன் நிச்சயம் சஞ்சனாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டான்"
YOU ARE READING
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)
Romanceமுதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனத...