24 புரிதலுக்கு அப்பாற்பட்ட...
அலுவலகத்திற்கு வந்த தூயவன் தன் அறையை நோக்கி நடந்தான். அங்கு சந்தோஷை கண்ட அவனது கால்கள், சில நொடிகள் நின்றன. அவனைப் பார்த்த சந்தோஷும் நின்றான். தூயவனை பார்த்து புன்னகை புரிந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு தன் அறைக்கு சென்றான் தூயவன். தனது அறையில் நுழைவதற்கு முன், பின்னால் திரும்பிப் பார்த்த சந்தோஷ், அவனது தங்கை தூயவனின் அறைக்குள் நுழைவதை பார்த்து எரிச்சல் அடைந்தான்.
தனது அனுமதி இல்லாமல் தன் அறைக்குள் நுழைந்த கஞ்சனாவை பார்த்த தூயவன் கோபத்தில் பல்லை கடித்தான். அவனது முக பாவத்தை ஊன்றி கவனித்தபடி நின்றாள் சஞ்சனா. சந்தோஷுக்கும் வெண்மதிக்கும் இடையில் இருந்த உறவைப் பற்றி தெரிந்த பிறகு, அவன் தன்னிடம் கடுமை காட்ட மாட்டான் என்று நம்பினாள் சஞ்சனா. ஆனால் அவன் தூயவன் ஆயிற்றே...!
"நீ இங்க எதுக்கு வந்த?" என்று சீறினான்
"உங்களைப் பார்த்து..."
"உங்க அப்பாவோட கேபின் ரிசப்ஷன் பக்கத்துல இருக்கு. போ..."
"அது எனக்கு தெரியும். நான் உங்களை பார்க்கத்தான் வந்தேன். என் அண்ணனும் உங்க அக்காவும்..."
அவளது பேச்சை வெட்டி,
"எங்க அக்கா கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிட்டாங்க. கேட்கலயா நீ?"
"ஆமாம்... ஆனா, நம்ம ஏன் அதை நடத்தி வைக்க கூடாது?"
"எங்க அக்காவுக்கு விருப்பம் இல்லாத எதயும் செய்ய நான் தயாரா இல்ல"
"உங்க அக்கா சந்தோஷமா இருக்க வேண்டாமா?"
"அவங்க ஏற்கனவே எங்க கூட சந்தோஷமா தான் இருக்காங்க"
"ஆனா, எங்க அண்ணன் மாதிரி ஒரு நல்லவனை கல்யாணம் பண்ணிக்கிற எல்லா தகுதியும் அவங்களுக்கு இருக்கு. நீங்க மட்டும் என் கூட கொஞ்சம் கோவாப்ரேட் பண்ணா, நிச்சயம் அவங்களை எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க என்னால முடியும்"
YOU ARE READING
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)
Romanceமுதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனத...