23 மேலானவர்

425 43 5
                                    

23 மேலானவர்

"தன்னுடைய மனசுக்கு நெருக்கமானவங்களுக்காக மட்டும் தான் பொண்ணுங்க அழுவாங்க" என்று கூறிவிட்டு சமையலறைக்கு சென்றார் குணமதி.

மனதிற்கு நெருக்கமானவரா? அப்படி என்றால் அவன் பவித்ராவின் மனதிற்கு நெருக்கமாகி விட்டானா? அதுவும் அவளது அம்மாவிற்கு அடுத்தபடியாக? வியந்து போனான் தூயவன்.

குணமதியை பின்தொடர்ந்து சமையலறைக்கு சென்ற தூயவன்,

"அவ கில்டியா ஃபீல் பண்றான்னு நினைக்கிறேன்"

"யாரு?"

"பவித்ரா"

"எதுக்காக?"

"நீங்க தானே சொன்னீங்க? பொண்ணுங்க அவங்க மனசுக்கு நெருக்கமானவங்களுக்காக தான் அழுவாங்கன்னு?"

"ஆமாம், சொன்னேன்"

"என்னை சோபாவில் இருந்து எழுப்பாம விட்டதுக்காக அவ ஃ பீல் பண்ணியிருக்கணும். இல்லன்னா அவளுக்கு ஏன் மேல மரியாதை இருக்கலாம்..."

"செக் பண்ணி பார்த்துடலாம்" என்று மீண்டும் உணவு மேசையை நோக்கி நடந்தார்.

"எப்படிமா செக் பண்ணுவீங்க?" என்று மீண்டும் அவரை பின்தொடர்ந்து வந்தான் தூயவன்.

"நான் அதைப் பத்தி யோசிக்கணும்"

அப்பொழுது அவர்கள் பவித்ரா வெண்மதியுடன் வருவதை பார்த்தார்கள்.

தூயவன் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டான்.

"நீ இப்போ நார்மல் ஆயிட்டியா?" என்று வேண்டுமென்றே கேட்டார் குணமதி, தூயவனுக்கு சிற்றுண்டியை பரிமாறியவாறு.

"அவங்களுக்கு என்ன ஆச்சு?" என்றாள் வெண்மதி.

"நம்ம தூயாவுக்காக அவ அழுதா"

"என்னது? தூயாவுக்காகவா? அவனுக்கு என்ன ஆச்சு?" என்று பதற்றம் அடைந்தாள் வெண்மதி.

"நான் சோபாவிலிருந்து கீழே விழுந்துட்டேன், கா" என்றான் முகத்தை சோகமாய் வைத்தபடி.

"எப்படி விழுந்த?"

"தூக்கத்தில் விழுந்துட்டேன்"

என்னுயிர் நின்னதன்றோ...! Where stories live. Discover now