47 மாயவனும் மாதேஷும்
"உன் பொண்ணை கூட்டிகிட்டு இங்கிருந்து போ" என்றார் மாயவன்.
"என்ன்னனது? இதை சொல்லத்தான் என்னை கூப்பிட்டியா?"
"ஆமாம். அவ என் குடும்பத்துல எந்த பிரச்சனையையும் ஏற்படுத்துறத நான் விரும்பல"
"உன் குடும்பமா? எப்போதிலிருந்து நீ இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பிச்ச?"
"உன் பொண்ணு என் பிள்ளையை அவமானப்படுத்தின நிமிஷத்துல இருந்து"
"மாயா, இப்படி முட்டாளா இருக்காத"
"இவ்வளவு நாள் அப்படித்தான் இருந்தேன். இனிமே இருக்க மாட்டேன்"
"இப்போ நான் என்ன செய்யணும்னு நினைக்கிற?"
"நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே"
"முடியாது. உனக்கு சஞ்சனாவை பத்தி தெரியாதா?"
"எனக்கு தெரியும். அதனால தான் அவளை இங்கிருந்து கூட்டிக்கிட்டு போக சொல்றேன். நாங்க ஏற்கனவே அவளால். ரொம்ப பெரிய பிரச்சனையை எல்லாம் பாத்துட்டோம். இனிமே அது நடக்காது"
"உனக்கு ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன்"
"இதுக்கு அப்புறம் எல்லாமே இப்படித்தான் இருக்கும்"
"உனக்கு மூளை கெட்டு போச்சா?"
"நீ என்ன வேணா நினைச்சுக்கோ. ஏதோ ஒரு பாயிண்ட்ல நம்ம குடும்பத்துக்கு எது நல்லதுன்னு நம்ம உணர்ந்து தான் ஆகணும்"
"குடும்பமா? உன் குடும்பத்தார் தான் உன்னை வீட்டை விட்டு வெளியில அனுப்பிட்டாங்களே"
"ஆனா, இன்னும் நான் என் குடும்பத்தோட, என் வீட்ல தான் இருக்கேன்"
"அதுக்காக அவங்க உன்னை ஏத்துக்கிட்டாங்கன்னு அர்த்தமில்ல"
"நீ அதை பத்தி கவலைப்பட வேண்டியதில்ல. உன் பொண்ணு இங்க இருக்கிற வரைக்கும் என்னை அவங்க ஏத்துக்க மாட்டாங்க. அவளை கூட்டிக்கிட்டு போ"
"எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு, மாயா"
"உன் எல்லை என்னன்னு நீ தெரிஞ்சுக்கோ. நான் எந்த அளவுக்கு போவேன்னு நான் காட்டினா, உன்னால தாங்க முடியாது"
YOU ARE READING
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)
Romanceமுதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனத...