14 கொந்தளிக்கும் கோபம்

534 48 4
                                    

14 கொந்தளிக்கும் கோபம்

"உங்களால தான் என் அக்கா விடோ ஆனாங்க" என்று உரத்த குரலில் தூயவன் கத்த அது மாதேஷுக்கும் மாயவனுக்கும் சங்கடத்தையும், பவித்ராவுக்கு அதிர்ச்சியையும் தந்தது.

அவள் அதே அதிர்ச்சியோடு வெண்மதியை ஏறிட்டாள். வெண்மதி ஒரு விதவையா? அவளால் அதை நம்ப முடியவில்லை இதற்காக தான், "நீங்கள் தனியாக இருப்பதை நான் விரும்பவில்லை" என்று தூயவன் கூறினானா? அதனால் தான், அவளையும் வெண்மதியின் அறையில் அவளுடன் தங்க வைத்தானா?

"அது எதிர்பாராம நடந்தது" என்றார் மாதேஷ்.

"என்ன எதிர்பார்க்கலை நீங்க? கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்றதுக்கு முன்னாடி மாப்பிள்ளை நல்லவனா இல்லையான்னு கூட விசாரிக்க மாட்டீங்களா நீங்க? உங்க பொண்ணுக்கு அவனை மாதிரி ஒரு குடிகாரனை நீங்க மாப்பிள்ளையா தேர்ந்தெடுப்பீங்களா?" சீறினான் தூயவன்.

தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினார் மாதேஷ்.

"மாட்டீங்க தானே? அப்புறம் அதை எங்க அக்காவுக்கு மட்டும் ஏன் செஞ்சீங்க? ஏன்னா, உங்க பொண்ணோட வாழ்க்கை உங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு எங்க அக்காவோட வாழ்க்கை உங்களுக்கு முக்கியம் இல்ல. இந்த குடும்பத்து மேல பொறுப்போட இருக்க வேண்டியவர், எப்பவுமே இந்த குடும்பத்துக்கு பதில் சொல்லக்கூடியவரா, பொறுப்பான மனுஷனா இருந்ததில்ல" என்று மாயவனை கோபக்கனலோடு பார்த்தான் தூயவன்.

"தீரஜ் ஒரு குடிகாரன்னு எனக்கு தெரியாது. அப்படி தெரிஞ்சிருந்தா, நான் அவனை நிச்சயமா வெண்மதிக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க மாட்டேன்"

"சிம்பிள்... அவ்வளவு தான் உங்களால சொல்ல முடியும் இல்லையா?" என்று கேட்ட தூயவனின் குரலில் ஏளனம் வழிந்து ஓடியது.

"உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல" என்றார் மாதேஷ்.

"முயற்சி பண்ணாதீங்க. உங்களால அது முடியாது"

"என் பேச்சைக் கேட்க நீ விரும்பலனாலும், உன்னை வழிநடத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கு"

என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)Where stories live. Discover now