20 பிரிந்தவர் கூடல்...

846 61 10
                                    

20 பிரிந்தவர் கூடல்...

பவித்ராவின் மருண்ட விழிகளை பார்த்த தூயவன் தன்னை சமாளித்துக் கொண்டான்.

"என்ன நம்பு. நான் எல்லா பிரச்சனையையும் தீத்துடுவேன். சந்தோஷோட காதல் உண்மையானதா இருந்தா, நான் நிச்சயம் அக்காவை அவருக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். இதையெல்லாம் நினைச்சு நீ கவலைப்படாத. புரிஞ்சுதா?" என்றான் தன் தலையை லேசாய் அசைத்தவாறு.

சரி என்று தலையசைத்தாள் பவித்ரா. அவளை வெண்மதியின் பக்கத்தில் அமர வைத்து,

"நடக்குறதுக்கு எல்லாம் நீ தான் காரணம்னு நினைக்காத. நீ இங்க இருக்கணும்ங்குறது விதி. நீ எங்க வாழ்க்கையோட ஒரு அங்கம். அதனால் தான் நான் உன்னை இங்கே கூட்டிகிட்டு வந்திருக்கேன்"

பவித்ரா வெண்மதியை பார்க்க, அவள் ஆம் என்று தலையசைப்புடன்   ஆமோதித்தாள்.

"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, கா? பவித்ரா ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர்" என்று பேச்சை மாற்றினான் தூயவன்.

"நெஜமாவா?" என்றாள் வெண்மதி வியப்புடன்.

ஆம் என்று தலையசைத்தாள் பவித்ரா.

"அவ ஏன் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆனான்னு காரணத்தை சொன்னா நீங்க இன்னும் ஆச்சரியப்படுவீங்க" என்று சிரித்தான்.

"என்ன காரணம்?"

"அவளுக்கு கம்ப்யூட்டர்னா ரொம்ப பிடிக்குமாம். அதை ஆபரேட் பண்ணணும்னு ஆசைப்பட்டு கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆனாளாம்"

அதை நம்ப முடியாத வெண்மதி வாயை பிளந்தாள்.  லேசான வெட்கத்துடன் புன்னகைத்தாள் பவித்ரா.

அப்பொழுது குழந்தைசாமி தூயவனை தேடிக் கொண்டு அங்கு வந்தார். அவரைப் பார்த்த தூயவன்,

"சொல்லுங்க, குழந்தை அண்ணா" என்றான்.

"இதை உங்ககிட்ட குடுக்க சொல்லி ஒருத்தர் கொடுத்துட்டு போனாரு" என்று ஒரு வண்ண காகிதத்தால் சுற்றப்பட்ட ஒரு பெரிய டப்பாவை அவனிடம் கொடுத்தார் குழந்தைசாமி.

என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)Where stories live. Discover now