31 நிகழ்வுகள்

544 49 8
                                    

31 நிகழ்வுகள்

தன் அறைக்கு வந்த சந்தோஷ், சின்னசாமியின் எண்ணை ஒரு காகிதத்தில் எழுதிக் கொண்டான். அதை தன் மணிபர்சில் வைத்துக் கொண்டு சஞ்சனாவிடம் இருந்து கொண்டு வந்த கைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்தான். என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டான். இது இருபுறமும் கூர்மையான கத்தியை கையாளுவது போன்ற விஷயம். எச்சரிக்கையாக தான் கையாளப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் காயப்படுத்தும் என்று அவன் உணர்ந்தான். வெண்மதி தன் தம்பியின் மீது உயிரையே வைத்திருக்கிறாள். அதற்கு இணையாக தூயவன் பவித்ராவை நேசிக்கிறான். ஒருவேளை சின்னசாமி பவித்ராவை கவர்ந்து சென்று விட்டால், தூயவனும் வெண்மதியும் உடைந்து போவார்கள். தனது திருமணம் பற்றிய எண்ணத்தை தன் மனதிலிருந்து வெண்மதி ஒட்டுமொத்தமாய் அழித்தொழிப்பாள். தன் மனதை அமைதிப்படுத்திக் கொண்டு, வேண்டிய நேரம் எடுத்து ஆலோசித்த பின், காவல்துறை உயர் அதிகாரிக்கு ஃபோன் செய்தான்.

"ஹலோ மிஸ்டர் சந்தோஷ், எப்படி இருக்கீங்க?"

"ஐ அம் ஃபைன் சார்"

"வாட் அபவுட் தூயவன்?"

"அவரும் நல்லா இருக்காரு. நான் அவர் சம்பந்தமா தான் உங்க கிட்ட பேச ஃபோன் பண்ணேன்"

"தூயவன் சம்பந்தமாவா? சொல்லுங்க"

"தூயவனோட ஃபியான்சியை  சில பேர் கடத்திக்கிட்டு போக போறதா என்னோட சோர்ஸ் சொல்லுது, சார்"

"தூயவனோட ஃபியான்சியா? அவருக்கு எங்கேஜ்மென்ட் ஆயிடுச்சா?" என்றார் ஆர்வமுடன்.

"இன்னும் இல்ல சார். இப்ப தான் பேசிக்கிட்டு இருக்கோம். அதைப்பத்தி யாருக்கும் தெரியாது. நீங்களும் அதை சீக்ரெட்டாவே வச்சுக்கோங்க"

"ஓ, ஷுயூர்... என்ன விஷயம்னு சொல்லுங்க"

"இதைப்பத்தி தூயவனுக்கு எதுவும் தெரியாது. அவருக்கு தெரியவும் கூடாது. உங்களுக்கு தான் அவரைப் பத்தி தெரியுமே! அவர் எல்லாத்துக்கும் ரொம்ப கோபப்படுவார். இந்த விஷயம் மட்டும் அவருக்கு தெரிஞ்சா, எல்லாரையும் அதம் பண்ணிடுவாரு. அதனால் தான் சார் இதை நான் உங்ககிட்ட சீக்ரெட்டா வச்சுக்க சொல்றேன்"

என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)Where stories live. Discover now