45 திருமதி பவித்ரா தூயவன்

652 55 10
                                    

45 திருமதி பவித்ரா தூயவன்

சஞ்சனாவை பார்த்த தூயவனின் கண்கள் அனிச்சையாய் பவித்ராவின் பக்கம் திரும்பியது. வெண்மதியோ சந்தோஷை ஏறிட்டாள். அவளை உறுதியுடன் பார்த்தபடி திடமாய் நின்றார் குணமதி, வரப்போகும் நாடகத்தை எதிர்கொள்ள தயாராகி. அவளை நோக்கி ஓடினான் சந்தோஷ்.

"நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க? எதுக்காக இங்க வந்த?" என்றான் சந்தோஷ் பல்லை கடித்துக் கொண்டு.

"உன்னை பாக்குற உரிமை எனக்கு இல்லயா அண்ணா?" என்றாள் சஞ்சனா.

"இப்போ இங்க எதுக்காக வந்த?"

"உன்னையும் அண்ணியையும் வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்தேன்" என்று அவள் கூறியதை கேட்டு எரிச்சல் அடைந்தான் சந்தோஷ்.

"நாங்க எங்கேயும் வரப்போறது இல்ல. நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு"

"இப்படி சொன்னா எப்படிண்ணா? நீ இன்னும் ரெண்டு நாள்ல ஃபிரான்ஸ்க்கு போக போற. உன்கூட இருக்கணும்னு எனக்கு விருப்பம் இருக்காதா?"

"உன்னோட வீணா போன எமோஷனல் டிராமாவை நிறுத்து. உன் நடிப்பை எல்லாம் பார்த்து நான் ஏமாறமாட்டேன்"

"உன் மனசை தொட்டு சொல்லு, உண்மையிலேயே எனக்கு உன் மேல பிரியம் இல்லயா?"

"இருக்கு. அதனால தானே நீ வெண்மதியை தீரஜ்க்கு கல்யாணம் பண்ணி வச்சு அவ வாழ்க்கையை நரகமாக்கின..." என்றான் மெல்லிய குரலில்.

"அண்ணா நீ நம்புனா நம்பு, அதுக்காக நான் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வருத்தப்படுறேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். என் வாழ்க்கையிலேயே நான் செஞ்ச ரொம்ப பெரிய தப்பு அது தான். நான் மட்டும் அதை செய்யாம இருந்திருந்தா எல்லாமே மாறி போயிருக்கும்"

"ஆமாம், வெண்மதியை யூஸ் பண்ணி நீ தூயவனை கல்யாணம் பண்ணிக்க முயற்சி பண்ணி இருப்ப"

"அண்ணா ப்ளீஸ் என்னை நம்பு. அந்த பழைய சஞ்சனா செத்துட்டா. தூயவனுக்கு இப்போ கல்யாணம் ஆயிடுச்சு. அதனால நான் பழைய கதையை எல்லாம் பேச தயாரா இல்ல. ப்ளீஸ் என் கூட நம்ம வீட்டுக்கு வாங்க"

என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)Where stories live. Discover now