16 சுயநல சஞ்சனா
சந்தோஷை அதிர்ச்சியுடனும் சஞ்சனாவை கோபத்துடனும் பார்த்தார் மாதேஷ். ஆம், முதன் முறையாக தன் மகளை அவர் கோபமாய் பார்த்தார். அவர்களை நோக்கி சென்ற அவர், சந்தோஷை அணைத்துக் கொண்டிருந்த சஞ்சனாவை பின்னால் இழுத்தார்.
"நீ என்ன சொன்ன?"
"ஐயம், சாரி டாட்"
அவளை அடிக்க தன் கையை உயர்த்தினார். அவர் கையை பிடித்து, அவரை தடுத்தான் சந்தோஷ்.
"என்னை விடு சந்தோஷ். வெண்மதிக்கு கல்யாணம் ஆன நாளிலிருந்து, இவளால தான் நான் தினம் தினம் தூயவன் கிட்ட அவமானப்பட்டுக்கிட்டு இருக்கேன். நான் தான் வெண்மதியோட வாழ்க்கையை கெடுத்துட்டதா அவன் நினைச்சுக்கிட்டு இருக்கான். ஒருவேளை நீ மட்டும் அவளை கல்யாணம் பண்ணி இருந்தா நம்ம வாழ்க்கை எவ்வளவு அழகாக இருந்திருக்கும்?"
"எப்படி இருந்திருக்கும், டாட்?" என்றான் சந்தோஷ் முகத்தில் எந்த பாவமும் இன்றி.
மாதேஷ் அதற்கு பதில் அளிக்கும் முன்,
"குணமதி ஆன்ட்டியை உங்க விருப்பத்துக்கு ஆட வச்சிருப்பீங்க. வெண்மதியோட ஷேர்சை யூஸ் பண்ணி என்னை அவங்க கம்பெனிக்கு சிஇஓவா மாத்தி இருப்பிங்க. அண்ட், லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், சஞ்சனாவை தூயவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பிங்க, அப்படித்தானே?"
"அஃப்கோர்ஸ், எஸ்" என்றார் பளிர் என்ற முகத்தோடு.
எக்களிப்பு புன்னகை பூத்தான் சந்தோஷ்.
"எனக்கு ஆஃபீஸ்க்கு டைம் ஆகுது" என்று சந்தோஷ் அங்கிருந்து கிளம்ப நினைத்த போது, அவன் கையைப் பிடித்து நிறுத்தினார் மாதேஷ்.
"எதுக்காக இன்ட்ரஸ்ட் இல்லாத மாதிரி இருக்க சந்தோஷ்?"
"நீங்க எப்போ வெண்மதியோட கல்யாணத்தை தீரஜ் கூட ஃபிக்ஸ் பண்ணிங்களோ, அப்பவே நான் என்னோட எல்லா இன்ட்ரெஸ்ட்டையும் இழந்துட்டேன். இப்ப கூட, நீங்க உங்களோட லாபத்தை பத்தி மட்டும் தான் பேசிக்கிட்டு இருக்கீங்க. என்னோட சந்தோஷத்தை பத்தி நினைக்கல"
ESTÁS LEYENDO
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)
Romanceமுதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனத...