25 என் வாழ்க்கை, என் விருப்பம்

648 50 6
                                    

25 என் வாழ்க்கை என் விருப்பம்

சந்தோஷ் கொடுத்த திருப்தியுடன் வீட்டிற்கு வந்தான் தூயவன். வரவேற்புரையில் யாரும் இல்லாததை கண்டான். ஆனால் அவனுக்கு பிடித்த பாதம் அல்வாவின் வாசம் அவன் மூக்கை துளைத்தது. குளித்துவிட்டு வருவதற்காக விறுவிறுவென தன் அறைக்குச் சென்றான். வெளியே சென்று வீடு திரும்பிய பின் குளிக்காமல் சாப்பிடுவது அவனுக்கு பிடிக்காது.

குணமதியும் வெண்மதியும் ஒரு கிண்ணம் நிறைய பாதாம் அல்வாவை எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு வந்தார்கள். குளித்து முடித்து வெளியே வந்த அவன் தன் அம்மாவும் அக்காவும் தன் அறையில் இருப்பதை பார்த்து புன்னகை புரிந்தான். அவர்களும் அவனைப் பார்த்து புன்னகை புரிந்தார்கள் தன் அறையில் மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த பாதாம் அல்வாவை பார்த்து வாவ் நீங்க அதை இங்கு எடுத்துக்கிட்டு வந்துட்டீங்களா என்றான்

ஆமாம். ஆனா பாதாம் அல்வாவை பற்றி உனக்கு எப்படி தெரிஞ்சது என்றாள் வெண்மதி

பாதாம் அல்வாவில் இருந்து வர்ற நல்ல வாசனை நீங்க என்கிட்ட இருந்து மறைக்க முடியாது கா

அது சரி...

ஒரு தேக்கரண்டி பாதாம் அல்வாவை எடுத்து தன் வாய்க்குள் அடைத்தான் தூயவன்.

ம்ம்ம்ம்... வாவ் மாம் நீங்க இந்த அல்வாவிலே ஏகப்பட்ட அன்பை கலந்து செஞ்சு இருக்கீங்க போல இருக்கு வேற லெவல்ல இருக்கு என்றபடி மீன் அடுத்த கரண்டி அல்வாவை தன் வாய்க்குள் திணித்தான்

அப்படியா நிஜமாவா சொல்ற? அன்பு உனக்கு தெரியுதா

என் பேச்சில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா சரி இருங்க என்று தன் கைபேசியை எடுத்து யாருக்கோ போன் செய்தான். வெண்மதி ஏதோ கேட்க முடியல அவளை தன் கையை காட்டி தடுத்து நிறுத்தினான். அவனது அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஹலோ...

ஹலோ மிஸ்டர் பன்வாரிலால் நான் தூயவன் பேசுறேன்

என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)Where stories live. Discover now