2 யார் அவள்?

707 48 4
                                    

2  யார் அவள்?

அவளது கண்ணீர் நிறைந்த வார்த்தைகளை கேட்டு வருத்தம் அடைந்தான் தூயவன். மூன்று நாட்களாக அவள் ஒன்றுமே சாப்பிடவில்லையா? ஏன் சாப்பிடவில்லை? மூன்று நாட்களாக ஒன்றும் சாப்பிடாமல் எப்படி இருக்க முடியும்? அவள் அந்த மூன்று நாட்களில் பட்டினியால் எவ்வளவு துன்பப்பட்டு இருக்க வேண்டும்...? சமையல் அறையின் உள்ளே நுழைந்த அவன், ஒரு தட்டை எடுத்து,  அங்கு ஹாட் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த பிரியாணியை வைத்து அதை அவளிடம் கொடுக்க , அவனை வியப்போடு பார்த்தாள் அந்தப் பெண்.

"இதை சாப்பிடு" என்றான்.

அந்த தட்டை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு, தரையில் அமர்ந்து சாப்பிட துவங்கிய அவள்,  அவன் கூறிய வார்த்தையை கேட்டு சாப்பிடுவதை நிறுத்தினாள்.

"உன் கண்ணை துடைச்சுக்கோ"

தன் புறங்கையால் கண்ணீரைத் துடைத்துவிட்டு, மீண்டும் அவள் சாப்பிட்டாள். அவள் முன்னாள் ஒரு குவளை தண்ணீரை வைத்துவிட்டு, அவளை தொந்தரவு செய்யாமல் சாப்பிட விட்டு காத்திருந்தான். சாப்பிட்டு முடித்து எழுந்து நின்ற அவள், அந்த தட்டை கழுவி சமையலறை மேடையின் மீது வைத்தாள்.

"யார் நீ? உன் பேர் என்ன? எதுக்காக இங்க வந்த?" என்றான் தூயவன்.

"என் பேர் பவித்ரா. நான் என்னை துரத்துறவங்க கிட்ட இருந்து தப்பிச்சு வரும் போது, தெரியாம இங்க வந்துட்டேன்"

"துரத்துறாங்களா? யாரு?"

மீண்டும் அவள் மோசமாய் அழத் துவங்கினாள்.

"எதுக்காக அழற?"

"எனக்கு இந்த கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்ல" என்று அழுதாள்.

அவள் இருக்கும் நிலை என்னவென்று அவனுக்கு ஓரளவு புரிந்தது.

"ஓ... கல்யாணம் பிடிக்கலன்னு உங்க குடும்பத்துக்கு தெரியாம வீட்டை விட்டு ஓடி வந்துட்டியா?"

"இல்ல, என்னை வேற எங்கேயாவது ஓடிப் போய் நல்லபடியா வாழ சொன்னதே எங்க அப்பா தான்"

என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)Where stories live. Discover now