28 ஆவேசம்
தனக்கு வந்த தகவலை படித்த பிறகு, அதை அனுப்பிய தன் ஆளுக்கு மறு தகவல் அனுப்பினாள் சஞ்சனா.
*சூழ்நிலை சரியாக இருக்கும் போது எனக்கு ஃபோன் செய்யவும்*
தன் அறையில் இங்கும் அங்கும் நடந்தவாறு அவனது அழைப்புக்காக காத்திருந்தாள். மதுரையில் நடப்பது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் அவளுக்கு. அவளே கூட அவனுக்கு ஃபோன் செய்து விசாரிக்க முடியும் தான்... ஆனால் அவனது சூழ்நிலை சரியில்லாமல் இருந்தால் என்ன செய்வது? அவன் சென்றிருப்பது பெரியசாமியின் இடத்திற்கு ஆயிற்றே!
அரை மணி நேரம் கழித்து அவளது ஆளிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றாள் சஞ்சனா.
"சொல்லு"
"அந்த பொண்ணு எங்க இருக்காங்கிற விஷயத்தை நான் பெரியசாமி கிட்ட சொல்லிட்டேன் மேடம்"
"இதுக்கு பின்னாடி இருக்கிறது யாருன்னு அவங்களுக்கு தெரியாது இல்ல?"
"தெரியாது மேடம். நான் அவங்களுக்கு ஃபோன்ல தான் விஷயத்தை சொன்னேன்."
"அங்க நிலவரம் என்ன?"
"அவங்க அந்த பொண்ணை விட, தூயவன் சார் மேல தான் பயங்கர கோவத்துல இருக்காங்க"
"ஆனா ஏன்?"
"அந்தப் பொண்ணை அவங்ககிட்ட இருந்து காப்பாத்தும் போது, தூயவன் சார் பெரியசாமியை ரொம்ப அடிச்சிட்டாரு. அவரு இன்னும் கூட ஹாஸ்பிடல் தான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவரோட ஹெல்த் கண்டிஷன் ரொம்ப மோசமாகிக்கிட்டே போகுது. அவரோட பையன் சின்னசாமி அவருடைய அப்பாவோட இந்த நிலைமைக்கு தூயவன் சார் தான் காரணம்னு ரொம்ப கோவமா இருக்கான். அவர் தூயவன் சாரை நிச்சயம் சும்மா விட மாட்டான். அவர் கிடைச்சா, அவரை கொல்லவும் தயங்க மாட்டான்"
"என்ன்ன்னனனது? அவங்களை எப்படியாவது டைவர்ட் பண்ணு. அவங்க நிச்சயம் தூயவனை மீட் பண்ண கூடாது"
"அதனால தான் நான் தூயவன் சார் வீட்டு அட்ரஸை அவங்களுக்கு கொடுக்காம, அந்த ஏரியாவை மட்டும் அவங்களுக்கு சொல்லி இருக்கேன். சரியான சந்தர்ப்பம் வர வரைக்கும் அவங்களை காத்திருக்க சொல்லி இருக்கேன்"
![](https://img.wattpad.com/cover/372468502-288-k220999.jpg)
YOU ARE READING
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)
Romanceமுதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனத...