18 சம்பந்தம்

578 47 5
                                    

18 சம்பந்தம்

"நீ சொல்றது உண்மையா, பவித்ரா?

"ஆமாம் மூனு முடிச்சு போடாமலேயே தானே அவர் கீழே விழுந்தாரு? அவரோட அக்காவோ, தங்கச்சியோ கூட மூனாவது முடிச்சை போடால. அப்படினா, அவங்க ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் இல்ல"

"ஒருவேளை, அது சரியா இருந்தா, ஏன் அதைப் பத்தி அக்காவோ அம்மாவோ யோசிக்கல?"

"சம்பிரதாய கோட்பாடுல நம்பிக்கை இருக்கிறவங்க அதை எல்லாம் யோசிக்க மாட்டாங்க. அதனால தான் அவங்க அதை உணரல"

அவள் கூறிய காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்ததால், ஆம் என்று தலையசைத்தான் தூயவன். குணமதி கலாச்சாரத்தையும் சம்பிரதாயங்களையும் மதிப்பவர். ஆனால் வெண்மதி அவ்வளவு ஒன்றும் பழமைவாதி அல்ல. அப்படி இருக்கும் போது, தான் விதவை என்று அழைக்கப்படுவதை ஏன் அவள் எதிர்க்கவில்லை?

"அது சரி, எதுக்காக இதை இவ்வளவு அவசரமா என்கிட்ட சொல்ற?"

"ஏன்னா, நீங்க ஃபிரான்ஸுக்கு போறீங்க"

"அதனால?"

"நீங்க மாதேஷ் சார் கிட்ட உங்க அக்காவோட வாழ்க்கையை பாழாக்கினதுக்காக சண்டை போட்டிங்க. நீங்க அந்த வேதனையை மனசுல சுமந்துகிட்டு ஃபிரான்ஸுக்கு போக வேண்டாம்னு தான் சொன்னேன். இப்போ நீங்க நிம்மதியா போவீங்க இல்ல?"

"எப்படி?"

"ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து நீங்க அவங்களை கல்யாணம் பண்ணி கொடுக்கலாம். அக்காவோட மனசை அழுத்திக்கிட்டு இருக்கிற கஷ்டத்துல இருந்து அவங்க வெளிய வந்துடுவாங்க, நிம்மதியா இருப்பாங்க"

அவளையும் அவள் கூறிய யோசனையையும் ரசித்தபடி தலையசைத்தான் தூயவன். இங்கு அவன், அவளது முழு நேர பாதுகாவலனாய் மாற முயன்று கொண்டிருக்கிறான். ஆனால் அவளோ, அவளை நிம்மதியான மனதுடன் ஃபிரான்சுக்கு அனுப்ப முயன்று கொண்டிருக்கிறாள்.

ஒரு விதத்தில் பவித்ரா கூறியது சரி தான். உண்மை தெரிந்து, அவனது மனம் லேசானது. அவனது அக்கா விதவை அல்ல. உண்மையை கூற போனால், திருமணம் ஆனவளும் அல்ல. இந்த விஷயத்தை மாதேஷ் முன்னிறுத்த முடியாது.

என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)Where stories live. Discover now