மாவீரன் பார்த்திபனின் அரண்மனை
பார்த்திபனின் படை தளபதி ஒரு அறையின் ஜன்னல் வழியாக தோட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்தான்.அப்போது பணி ஆள் ஒருவர் உள்ளே நுழைந்தார்.
"தளபதியாரே நீங்கள் அழைத்து வர சொன்ன நபரை அழைத்து வந்துள்ளேன்",என்றான்.
தளபதி வெற்றிவீரன் மெதுவாக திரும்பி அவனை பார்த்தான்.
பணி ஆளை செல்லும் படி கை அசைத்தான்.
"நீ தான் தேவராயன் வீட்டில் பணி புரியும் தலைமை காவலனா",என்றன் அவன் கனீர் குரலில்.
"ஆம் ஐயா",என்றான் அவன் பயந்த குரலில்.
"எத்தனை வருதடங்களாக அங்கு வேலை செய்கிறாய்",என்றான்.
"மூன்று வருடங்களாக"
"தேவராயனுக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை உள்ளது அப்படி தானே",என்றான்.
"ஆமாம்",என்றான் தயக்கத்துடன்.
"சரி நாளை காலை அவன் போருக்கு கிளம்பும் போது அவன் பருகும் தண்ணீரிலோ அல்லது பானத்திலோ இதை ஒர் இரண்டு துளிகள் கலக்க வேண்டும்",என்றான்.
"என்னால் முடியாது.அது என்ன",என்றான் காவலன் பதற்றமாக.
"இது ஒன்றும் இல்லை.கருந்தேளின் விஷம்.குடித்த சில மணி நேரங்களில் இறந்து போவான் உன் அரசன்",என்று கூறி சிரித்தான் வெற்றிவீரன்.
"இது அக்கிரமம்.குறுக்கு வழியில் வெற்றி பெற நினைக்கிறீர்கள்.இதை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்",என்றான் காவலாளி.
"அப்படியா",என்று கூறி கையை தட்டினான் வெற்றிவீரன்.
ஒரு பணி ஆள் ஒரு பெண்ணை இழுத்து வந்தான்.
"அய்யோ செல்லம்மா நீயா.நீ எப்படி இங்கே",என்று கதறினான் காவலன்.
"அதை நான் சொல்கிறேன்.நீ இதை செய்யவில்லை என்றால் உன் செல்லம்மா எங்கள் அனைவருக்கும் செல்ல அம்மா ஆகி விடுவாள்.அவன் இறந்த செய்தி எனக்கு வரும் வரை இவள் இங்கே டான் இருப்பாள்.இவள் கற்போடு வீடு திரும்ப வேண்டுமானால் இந்த விஷத்தை வாங்கிக் கொள்",என்றான்.
வேறு வழி இல்லாமல் காவலன் விஷத்தை வாங்கி சென்றான்.இது யாருக்கும் தெரிய கூடாது என்று அவனை வெற்றிவீரன் எச்சரித்து அனுப்பி வைத்தான்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.