ஒரு குழப்பத்துடன் அரண்மனைக்கு திரும்பினான்.நடந்ததை வெற்றிவீரனிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே பயணம் செய்தான்.
"என்ன பார்த்திபா அதற்குள் வந்துவிட்டாய் "என்றான் வெற்றிவீரன்."மக்களை சந்தித்தேன்.அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.எனவே நான் கிளம்பி வந்துவிட்டேன்"என்றான்.
சம்யுக்தை எதிரில் வந்து நின்றாள்.அவள் முகத்தை பார்க்கும் போது ஒரு வித குற்ற உணர்ச்சி தோன்றியது.இவள் முகம் அந்த மந்திர பந்தில் தோன்றியது ஏன் என்று யோசித்தான்.அந்த கிழவி கூறியது நினைவுக்கு வந்தது.அவள் உன் மனதுக்குள் வந்து விட்டாள்.நீ தடுமாற ஆரம்பித்துவிட்டாய்.
கோவம் அவன் முகத்தில் கொப்பளித்தது."மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் பிரச்சனையே இல்லாதவர்கள் எந்த நாட்டிலும் இருக்க முடியாது.நீங்கள் ஓர் இரு நாட்கள் அங்கே தங்கி இருந்து நன்கு அலசி இருக்க வேண்டும்"என்றாள் சம்யுக்தை.
பார்த்திபன் கண்களில் நெருப்பு கசிந்தது.
"நான் ஒரு அரசன்.என் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நன்கு தெரியும்.உன் அறிவுரை எனக்கு தேவையில்லை"என்று கூறிவிட்டு தன் அறைகுள் புயலென சென்றான்."நான் என்ன தவறு செய்தேன்.ஒரு அமைச்சராக என் கடமையை தானே செய்தேன்.ஏன் இப்படி என் மெல் கோவப்படுகிறார்"என்றாள்.
வெற்றிவீரன் பெருமூச்சு விட்டான்.
"ஏதோ ஒன்றை மனதில் போட்டு குழப்பிக் கொண்டு இருக்கிறான்.அவனை விட்டு பிடிப்போம்.அது வரை அவனுக்கு எதிராக எதுவும் பேசாதே"என்றான் வெற்றிவீரன்."எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது"என்றான் வெற்றிவீரன்.
"என்ன யோசனை அண்ணா?"என்றாள் சம்யுக்தை.
"அவன் பொறாமையை தூண்ட போகிறேன்"என்றான்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.