பல்லக்கில் பயணிக்கும் போது சம்யுக்தைக்கு பல வித எண்ணம் தோன்றியது.அவள் மனதில் ஒரு இனம் புரியாத பயம் தொற்றிக் கொண்டது.இரண்டு மணி நேர பயணத்துக்கு பிறகு ஆட்களின் பேச்சு சத்தம் கேட்டது.காடுகளை எல்லாம் தாண்டி ஊருக்குள் நுழைந்து விட்ட சத்தம் கேட்டது.
திடீர் என்று ஒரு சிலர் அலரும் சத்தம் கேட்டது.தன் திறையை விலக்கி சம்யுக்தை வெளியே பார்த்தாள்.திடுக்கிட்டாள்.அரசரின் காவளாலிகள் சிலர் ஐவரை சாட்டையால் அடித்துக் கொண்டு இருந்தார்கள்.அவர்கள் வலியால் துடித்து அலறிக் கொண்டு இருந்தார்கள்.
"இரக்கம் அற்றவர்கள்.முல்லை கூறியதை போல பார்த்திபன் கொடூரமான அரசன் தான் போல"என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் ஊருக்குள் வந்ததை உணர்ந்தாள்.தன் திறையை அகற்றி பார்த்தாள்.மக்கள் அனைவரும் அவள் பல்லக்கில் வருவதை சற்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.சம்யுக்தைக்கு சங்கடமாக இருந்தது.கணவன் இறந்த துக்கத்தை அனுபவிப்பதற்குள் இந்த துக்கம் அவளை சுழ்ந்துவிட்டது என்று வேதனை அடைந்தாள்.
அரண்மனை வாசலில் பல்லக்கு நின்றது.வீரர்கள் அவளை மெதுவாக இறக்கினார்கள்.தயக்கத்துடன் அவள் மெதுவாக காலை வெளியே எடுத்து வைத்தாள்.வெற்றிவீரன் அவள் அருகில் வந்து நின்றான்.
"யாருக்காக காத்து இருக்கிறீர்கள்.உங்களை யாரும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க போறது இல்லை.உள்ளே போகலாம் வாருங்கள்"என்றான்.
"நான் இங்கே வாழ வரவில்லை அதனால் அரத்தி எல்லாம் எதிர் பார்க்கவில்லை"என்றாள் சம்யுக்தை.
மாவீரன் பார்த்திபனின் அரண்மனை மிக நேர்த்தியாக கட்டப்பட்டு இருந்தது.அவன் அரண்மனையை சுற்றி தண்ணீர் இருந்தது.யாரும் அதை தான்டி அரண்மனைக்குள் நுழைய முடியாது.பெரிய சுவர்களால் சுற்றிலும் அரன் அமைக்கப்பட்டு இருந்தது.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.