போர்களம்
6.00 மணி காலைபோர் சங்கு முழங்கியது.
ஒரு பக்கம் தேவராயனின் படையும் மறுபக்கம் பார்த்திபனின் படையும் நின்றன.சங்கு முழங்கியதும் இரு பக்கத்தில் இருந்தும் வீரர்கள் தங்கள் ஆயுதத்துடன் பாய்ந்து வந்தனர்.போர் துவங்கியது.தேவராயனின் குதிரை படை எதிர் பக்கமாக படை எடுத்து எதிரிகளை நோக்கி பாய்ந்தன.தேவராயனின் படை தளபதி அவ்வப்போது வீரர்கள் தளராமல் இருக்க வீர முழக்கங்களை எழுப்பினார்.தேவராயனின் படை எதிரிகளை அழித்து முன்னேறிக் கொண்டு இருந்தனர்.
எதிரிகளை நெருங்க நெருங்க எதிரி நாட்டு அரசன் யானை மீது அமர்ந்து இருப்பது நன்றாக தெரிந்தது.அவன் அருகில் வெற்றி வீரன் குதிரையில் அமர்ந்து கொண்டு படை வீரர்களுக்கு கட்டளை இட்டுக் கொண்டு இருந்தான்.
எதிரி படை நெருங்கி வரும் போது வெற்றி வீரன் வெடி குண்டுகளை வீச கட்டளை இட்டான்.ஒரு பெரிய குண்டு எதிரி படை மீது வீசப்பட்டது.முன்னேரி வந்த வீரர்கள் அனைவரும் குண்டு வெடித்ததில் சிதறி விழுந்தனர்.இதை கண்ட தேவராயன் திடுக்கிட்டான்.மேலும் குண்டுகள் அவன் வீரர்களை சிதற செய்தன.தேவராயன் படை வீரர்கள் விஷம் தடவிய அம்புகள் எய்தனர்.அம்பு பட்ட வீரர்கள் அனைவரும் உடனே இறந்தனர்.இரு பக்க வீரர்களும் மடிந்து போயினர்.கடைசியாக தேவராயன் படை தலைவன் யானை படையை அனுப்பினான்.
இரு படை தளபதிகளும் களத்தில் இறங்கி சண்டை போட ஆரம்பித்தார்கள்.தேவராயனின் தளபதி எதிரி படையை தன் வாளால் வீழ்த்திக் கொண்டே முன்னேரினான்.திடீர் என்று அவன் கழுத்தில் பின்னால் இருந்து யாரோ வெட்டினார்கள்.திரும்பி பார்த்தான்.அவன் கண்கள் விரிந்தன.அங்கேயே விழுந்தான்.அவன் பின்னால் நின்றது எதிரி படை அரசன் பார்த்திபன்.பார்க்கவே மிக கம்பீரமாக.கட்டுக் கோப்பான உடலுடன்.எதிரிகளை நடுங்கச் செய்யும் உருவமும்.பெண்களை வசீகரிக்கும் முகமும் கொண்டவனாய் நின்றான்.அவன் பலத்தில் நூறு யானைகளை போன்றவன்.இப்போது போர் களத்தில் மதம் பிடித்த யானை போல் எதிரிகளை வீழ்த்திக் கொண்டு இருந்தான்.படை தளபதியை இழந்த தேவராயன் தானே களத்தில் இறங்கினான்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.