வெற்றிவீரன் விரைந்து சென்று கொண்டு இருந்தான்.அவன் பின்னால் குதிரைகளில் ராஜ் திலக்கின் வீரர்கள் துரத்திக் கொண்டு வந்தனர்.
சென்று கொண்டு இருக்கும் போதே தனது வாளை எடுத்து பின்னால் வந்து கொண்டு இருந்தவன் மீது வீசினான்.வந்த வேகத்தில் அவன் கழுத்து வெட்டுப்பட்டு கீழே விழுந்தான்.மற்றொரு குதிரை அவன் அருகில் வந்தது.மர கிளையை பிடுங்கி அவனை அடித்தான்.அவன் குதிரையிலிருந்து கவிழ்ந்தான்.
இப்படியே ஒவ்வொருவராக வீழ்த்தினான் வெற்றிவீரன்.
எவரும் இவர்களை பின் தொடரவில்லை என்பதை உறுதி செய்துவிட்டு சற்று வேகத்தை குறைத்தான்.அஞ்சனை நடந்த விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் அதிர்ந்து போய் இருந்தாள்.
சிறிது தூரத்தில் ஒரு குடில் தெரிந்தது.வெற்றிவீரன் குதிரையை நிறுத்திவிட்டு இறங்கினான்.அஞ்சனை மெதுவாக இறங்கினாள்.
பார்த்திபன் அங்கே அஞ்சனைகாக காத்துக் கொண்டு இருந்தான்.
"என்ன அஞ்சனை என்ன ஆயிற்று.ஏன் இப்படி இருக்கிரீர்கள்"என்று வினவினான்.
அஞ்சனை அழுக துவங்கினான்.
வெற்றிவீரன் அவள் அருகில் வந்து அவள் பாதுகாப்புக்காக நின்றான்."நான் பார்...... மாறன்.பார்த்திபனின் படை தலைவன்.அஞ்சனை தான் என் சிலையை செய்து கொண்டு இருக்கிறார்"என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.
"நான் வெற்றிவீரன்.அஞ்சனையின் உடன்பிறவாத அண்ணன்"என்றான்.
"என்ன ஆயிற்று"என்றான் பார்த்திபன்.
வெற்றிவீரன் நடந்ததை கூறினான்.
"அஞ்சனையை கொல்ல வந்தார்களா"என்றான் பார்த்திபன் ஒரு வெறியோடு.பேசிக் கொண்டு இருக்கும் போதே ராஜ் திலக்கின் ஆட்கள் வர பார்த்திபன் வாளை சுழற்றினான்.வெற்றிவீரனும் அவன் வாளை எடுத்தான்.இருவரும் காற்றில் பறந்து வாள் சண்டையிட்டனர்.
வீரர்கள் அனைவரும் மடிந்து போயினர்.ராஜ் திலக் மட்டும் நின்று கொண்டு இருந்தான்.
"அந்த வைர பெட்டியை என்னிடம் கொடுத்து விடு.அந்த பெண்ணை நான் விட்டு விடுகிறேன்.இல்லையேல் அவளை கண்டிப்பாக கொல்லுவேன்"என்றான் வட மொழியில்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.