சம்யுக்தை அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தாள்.கண்களில் நிர் பெருகியது.அஞ்சனைக்கு தன் கணவன் செய்த கொடுமையை அவளாள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இப்படி பட்ட மிருகத்தோடு இத்தனை நாள் வாழ்ந்ததை எண்ணி அறுவருப்பு உற்றாள்.இவனுக்காகவா பார்த்திபனை கொல்ல துணிந்தேன் என்று எண்ணி வேதனை உற்றாள்.
"ஒரு அண்ணனும் கணவனும் பார்க்க கூடாத கோலத்தில் அவளை பார்த்தோம்.தூக்கி வளர்த்த தங்கை கண் முன் இறப்பதை கண்ட துர் அதிர்ஷ்டசாலி நான். அவள் தாயான செய்தியை கூட கணவனிடம் கூறாமல் இந்த பூ உலகை விட்டு போய் விட்டாள். அதற்கு காரணம் உன் கணவன்.அவனை உயிரோடு புதைக்க துடித்தான் பார்த்திபன்.நானும் தான்.ஆனால் அஞ்சனைக்கு நான் கொடுத்த வாக்கு என்னை கட்டி போட்டது.
ஒரு நல்ல சமயத்துக்காக காத்து இருந்தோம்.ஒரு அரசன் போரின் போது புற முதுகில் குத்து வாங்குவது அவனுக்கு மற்றுமின்று அவன் சந்ததியினருக்கே அவமனத்தை சேர்க்கும்.அதற்காக தான் அவனுக்கு விஷம் கொடுத்தேன்."என்று கூறி மௌனம் ஆனான்."சிறு வயதில் இருந்து பாட்டு பரத நாட்டியம் ஓவியம் சிலை வடித்தல் எல்லாம் கற்று என்ன பயன்.தற்காப்பு கலையை பயில அவளுக்கு தோனவில்லையே.ஆபத்து வரும் போது தன்னை காத்துக் கொள்ள அவளால் முடியவில்லையே.
அதனால் தான் பெண்கள் அனைவரும் தற்காப்புக் கலையை கற்க வேண்டும் என்று கட்டளையிட்டான்."என்று கூறி முடித்தான்.வெற்றிவீரன் கண் கலங்கினான்.காட்டில் இருக்கும் மரங்களை வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்.
சம்யுக்தை மெதுவாக அவன் அருகில் வந்து அவன் தோளை தொட்டாள்.
"உங்கள் வேதனை எனக்கு புரிகிறது.உங்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஈடு இனை இல்லாதது.என் கணவன் இப்படிபட்ட மிருகம் என்று நினைக்கும் போது என் மனம் வேதனை அடைகிறது."என்றாள்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.