பார்த்திபனை உள்ளே அழைத்து சென்றாள்.
பணி ஆட்களை அழைத்து மருத்துவரை அழைக்க சொன்னாள்.சிறிது நேரத்திலேயே மருத்துவர் வந்து கட்டு போட்டார்.
அவன் கையை அசைக்க கூட முடியாமல் சிரமப்பட்டான்.அவனை படுக்கையில் படுக்க வைத்து விட்டு போர்வையை போர்த்திவிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
தன் அறைக்கு சென்றாள்.பல வித கேள்விகள் அவள் மனதில் முளைத்தன.விடை தெரியாமல் குழம்பிப்போனாள்.
பணி பெண் ஒருத்தி உணவு தயாராக உள்ளது என்று கூற வந்தாள்.
"நீ இங்கே எத்தனை நாட்களாக வேலை செய்கியாய்"என்றாள் சம்யுக்தை."இரண்டு ஆண்டுகளாக அம்மையே"என்றாள் அவள்.
"சரி உனக்கு அஞ்சனை யார் என்று தெரியுமா?"என்றாள்.
அவள் முகம் சற்று கலவரம் ஆனது.
"மன்னியுங்கள் அம்மையே.இது போன்ற விஷங்களை உங்களிடம் பேச கூடாது என்று எனக்கு உத்தரவு"என்றாள்."உத்தரவு போட்டது யார்?"என்றாள் சம்யுக்தை.
"வெற்றிவீரன் அவர்கள்"என்று கூறி விட்டு உடனே வெளியே சென்றாள்.
"இரு மன்னர் சாப்பிட்டாரா?"என்றாள்.
ஆனால் அதற்குள் அவள் சென்றுவிட்டாள்.
சம்யுக்தை வெளியே வந்து மெதுவாக மாடி ஏறினாள்.
மீண்டும் அந்த கதவு அருகே வந்த போது உள்ளே செல்ல வேண்டும் என்று ஆர்வம் தூண்டியது ஆனால் இப்போது அதன் சாவி சுவரில் மாட்டப்படவில்லை.ஒரு வேளை இனி யாரும் நுழைய கூடாது என்பதற்காக அதை மன்னர் ஒழித்து வைத்திருக்க கூடும் என்று நினைத்தாள்.அவர் அறையின் கதவை மெதுவாக தள்ளினாள்.
பார்த்திபனின் உணவு அவன் படுக்கையின் அருகில் வைக்கப்பட்டு இருந்தது.அவனால் அதை எடுத்து உண்ண முடியவில்லை."நான் உதவட்டுமா"என்றாள்.
அவன் திடுக்கிட்டு அவளை பார்த்தான்.
BINABASA MO ANG
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.