சுயம்வரத்துக்கான ஏற்பாடு வெகு விரைவாக நடந்து கொண்டு இருந்தது.மிக விமர்சியாக நடக்க வேண்டும் என்று பார்த்திபன் கட்டளை இட்டான்.சுயம்வரத்தில் சம்யுக்தை யாருக்கு மாலை அணிவிக்கிறாளோ அந்த நபரோடு அன்றே திருமணம் நடைபெற உள்ளதாக அறிவித்தான்.
சம்யுக்தையின் மனதை புரிந்து கொள்ளாமல் பார்த்திபன் எல்லா ஏற்பாடையும் செய்து கொண்டு இருந்தான்.வெற்றிவீரன் எவ்வளவு தடுத்தும் பார்த்திபன் அவன் பேச்சை கேட்கவே இல்லை.
சுயம்வரத்துக்கு இரண்டு நாளே இருக்க சம்யுக்தைக்கு நாட்டில் உள்ள சிறந்த பட்டை கொண்டு நெய்த சேலை கொண்டுவரப்பட்டது.அதனோடு விலை உயர்ந்த ஆபரணங்களும் கொண்டு வரப்பட்டது.
பணி பெணொருத்தி மன்னர் அழைப்பதாக கூறி சம்யுக்தையை அழைத்தாள்.சம்யுக்தை சங்கடமாக பார்த்திபன் முன் நின்றாள்.
"வா சம்யுக்தை இது நான் உன் திருமணத்துக்காக ஏற்பாடு செய்த சேலையும் ஆபரணங்களும்.உனக்கு பிடித்து இருக்கிறதா"என்றான்.சம்யுக்தை வெற்றிவீரனை பார்த்தாள்.வெற்றிவீரன் சங்கடமாக அவளை பார்த்தான்.
"பிடிக்கவில்லை என்றால் சொல் நான் வேறு ஒரு சிறந்த ஆடியை நெய்து வர சொல்கிறேன்"என்றான்."வேண்டாம் அரசே இதே நன்றாக தான் இருக்கிறது"என்றான் வெற்றிவீரன் வெறுப்பாக.
பார்த்திபன் அவனை பார்த்து முறைத்தான்.
"அதை அவள் சொல்லட்டும்"என்றான்."நன்றாக இருக்கிறது"என்று சற்று தளர்ந்த குரலில் கூறிவிட்டு அவள் சென்றாள்.
"பார்த்திபா நீ அவசர படுகிறாய்"என்றான் வெற்றிவீரன்.
"ஏன் இப்போது என்ன ஆயிற்று"என்றான் பார்த்திபன்.
"ஒருவன் நல்லவனா இல்லை கொடியவனா என்று எப்படி கண்டுபிடிப்பாய்"என்றான் வெற்றிவீரன்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.