அறை மணி நேரம் கழித்து மீண்டும் அந்த பணி ஆள் சம்யுக்டையின் கதவை தட்டி மன்னர் வந்துவிட்டதை தெறிவித்தான்.
அவள் அழுந்து அவள் ஆடைகளை கண்ணாடியில் சரி பார்த்துவிட்டு வெளியே வந்தாள்.
சம்யுக்தையை பணி ஆள் மாடிக்கு அழைத்து சென்றான்.சம்யுக்தை அரண்மனையை சுற்றி பார்த்தாள்.சுவர்களில் பல ஓவியங்கள் மாட்டப்பட்டு இருந்தன.மிக அழகாக வரையப்பட்ட ஓவியங்கள்.மன்னரின் அறைக்கு செல்லும் வழியில் ஒரு அரசரின் பெரிய படம் மாட்டப்பட்டு இருந்தது.அதுக்கு மலர் மாலை அணிவித்து இருந்தனர்.
அது ஒரு வேலை பார்த்திபனின் தந்தையாக இருக்கலாம் என்று சம்யுக்தை நினைத்துக் கொண்டாள்.ஒரு பெரிய மூடப்பட்ட கதவை காட்டி "உள்ளே செல்லுங்கள்"என்றான் பணி ஆள்.
அவள் மிகுந்த தயக்கத்துடன் கதவை லேசாக தட்டினாள்.ஆனால் எந்த பதிலும் இல்லை.
கதவை தள்ளினாள்.அது திறந்தது.மெதுவாக உள்ளே சென்றாள்.
மன்னனின் அறையை பார்த்து திடுக்கிட்டாள்.ஒரு மைதானம் போல பெரிதாக இருந்தது.ஒரு புறம் பெரிய படுக்கையும்.மற்ற ஒரு புறம் நால்வர் அமர்ந்து சாப்பிடும் நார்காளி மேசை.நடுவில் ஒரு அழகான கண்ணாடி விளக்கு.
ஆங்கங்கே ஓவியங்கள்.ஒரு ஓவியம் அவளை கவர அதன் பக்கம் சென்று நின்றாள்.
அது ஒரு மன்னனின் ஓவியம்.கம்பீரமான தோள்கள் வில்லை போன்ற கண்கள் அழகிய மூக்கு சிவப்பான உதடுகள்.அவன் கண்கள் ஏதொ தெறிவித்தன.அந்த ஓவியம் அவளை ஏதோ செய்தது.அதிலிருந்து கண்களை எடுக்க முடியவில்லை.கீழே அஞ்சனை என்ற பெயர் கிருக்கப்பட்டு இருந்தது."நீ ரசித்துக் கொண்டு இருக்கும் ஓவியம் என்னுடையது"என்ற சத்தம் கேட்டு திடுகிட்டாள்.
மெல்ல திரும்பினாள்.அதே கம்பீரமான உருவம்.காந்தம் போன்ற கண்கள்.அதை சில நொடிகளுக்கு மேல் நேரே அவளாள் பார்க்க முடியவில்லை.
அவளின் வெள்ளை உடையும் பொட்டில்லாத அகன்ற நெற்றியும் பார்த்திபனை குற்ற உணர்ச்சியில் தள்ளியது.அவன் செய்ததற்கு இவளுக்கு தண்டனை வழங்கியதை எண்ணி அவன் வேதனை அடையாத நாளே இல்லை.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.