சம்யுக்தையும் தெவியும் நல்ல தோழிகள் ஆனார்கள்.அஞ்சனை யார் என்பதை பற்றி அவளிடம் கேட்கலாம் என்று சம்யுக்தை முடிவு செய்தாள்.
"தேவி நம் மன்னருக்கு தாய் தந்தை இல்லையா"என்றாள் சம்யுக்தை.
"இல்லை மகாராஜா ஒரு போரில் இறந்து போனார்.ராணி அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்."என்றாள்."சரி இவர் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை"என்றாள் சம்யுக்தை.
"உங்களுக்கு விஷயமே தெரியாதா.மன்னனுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின"என்றாள்.
சம்யுக்தை திடுக்கிட்டாள்.
"என்ன திருமணம் ஆகிவிட்டதா.அவர் மனைவியை நான் இது வரை பார்க்கவே இல்லையே"என்றாள்."அவர்கள் பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு சென்று இருக்கிறார் என்று எனது அம்மா கூறினார்"என்றாள் தேவி.
சம்யுக்தைக்கு ஒரு ஓரமாக வருத்தமாக இருந்தது அது ஏன் என்று அவளுக்கு தெரியவில்லை.
"சரி அவர் மனைவி பெயர் என்ன"என்றாள் சம்யுக்தை.
தேவி ஏதோ சொல்ல முற்பட்ட போது"தேவி"என்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டாள்.
பார்த்திபன் இவர்களை முறைத்துக் கொண்டு இருந்தான்.
"பயிற்சியின் போது என்ன வெட்டி பேச்சு.போய் பயிற்சி செய்யுங்கள்"என்றான்.
அவள் மறு பேச்சு பேசாமல் சென்றாள்.பார்த்திபன் சம்யுக்தையை பார்த்தான்."பயிற்சிக்கு செல்லுங்கள்"என்று கூறிவிட்டு சென்றான்."ஒரு வேலை அஞ்சனை என்பது பார்த்திபனின் மனைவியாக இருக்குமோ.ஆனால் வெற்றிவீரன் எதற்காக கண் கலங்கினான்.என் கணவன் செய்த துரோகம் தான் என்ன"என்று எண்ணி குழம்பினாள் சம்யுக்தை.
சம்யுக்தை மக்கள் நல அமைச்சர் ஆன பிறகு அடிகடி ஊருக்குள் சென்று மக்களொடு மக்களாய் கலந்து அவர்கள் குறைகள் அனைத்தையும் கேட்டு அறிய நினைத்தாள்.மன்னரிடமும் அனுமதி வாங்கினாள்.பார்த்திபன் அவள் தனியாக செல்ல வேண்டாம் என்று எண்ணி வெற்றிவீரனை அவளோடு அனுப்பி வைத்தான்.
வெற்றிவீரன் முதலில் மறுத்தான் பின் மன்னர் கட்டளையை ஏற்றுக் கொண்டான்.
VOCÊ ESTÁ LENDO
மாவீரன் பார்த்திபன்
Ficção Históricaஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.