தேவராயன் செய்ததை பற்றி அஞ்சனையிடம் சொல்ல வேண்டாம் என்று பார்த்திபன் வெற்றிவீரனிடம் கேட்டுக் கொண்டான்.
ஒரு வாரம் கழித்து....."அஞ்சனை"என்றான் பார்த்திபன்.
"சொல்லுங்கள் அரசே"என்றாள் அஞ்சனை."ஊருக்கு தான் நான் அரசன்.உன்னை பொருத்தவறை நான் எப்போதும் உன்னுடையவன் தான்"என்றான் பார்த்திபன்.
அஞ்சனை அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
"கடவுள் எனக்கு கொடுத்த அற்புதமான வரம் நீங்கள்.உங்கள் அன்பு எனக்கு எப்போதும் கிடைத்தால் போதும்."என்றாள்."கிடைக்காமல் என நாம் நூறு வருடங்கள் இன்பமாக வாழ போகிறோம்"என்றான் பார்த்திபன்.
"நான் இல்லாத போது உன்னோடு விளையாட ஒரு பரிசை கொண்டு வந்துள்ளேன்"என்றான் பார்த்திபன்.
"என்ன அது.உடனே காட்டுங்களேன்"என்றாள் ஆர்வமாக.
"அவசரபடதே.உன் கண்களை மூடிக் கொள்.பார்க்க கூடாது.இரு வருகிறேன்"என்றான்.
கண்களை மூடிக் கொண்டு காத்து கொண்டு இருந்தாள்.
"அஞ்சனை மெதுவாக கண்களை திற"என்றான்.
விழித்து பார்த்த அவள் ஆனந்தத்தில் மூழ்கினாள்.
ஒரு அழகிய மான் குட்டி அவன் கையில் இருந்தது.
அதை அவள் கையில் வாங்கிக் கொண்டு கொஞ்சினாள்.
"பிடித்து இருக்கிறதா"என்றான்."மிகவும் பிடித்து இருக்கிறது" என்று கூறி முத்தம் இட்டாள் மானை.
"மானுக்கு மட்டும் தானா"என்றான் அவன்.
"போங்கள் எனக்கு வெட்மாக இருக்கிறது"என்றாள்.
அவன் அவளை கட்டி அனைத்து முத்தமிட்டான்.
மறுநாள் அஞ்சனை மயங்கி இழுந்தாள்.அவளோடு இருந்த தோழிகள் மருத்துவரை அழைத்து வந்தனர்.அவர் அவள் நாடியை பிடித்து பார்த்துவிட்டு சிரித்தார்.
"என்ன ஆனது மருத்துவரே"என்றாள் ஒரு தோழி.
ESTÁS LEYENDO
மாவீரன் பார்த்திபன்
Ficción históricaஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.