சம்யுக்தை அரண்மனைக்கு வந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது.ஒரு நாள் பார்த்திபன் அவளை அழைத்தான்.
"உள்ளே வரலாம "என்றாள் அவன் அறைக்கு வெளியே நின்று கொண்டு.
"வாருங்கள்"என்றான் பார்த்திபன் புன்னகையுடன்.
"எதற்காக என்னை அழைத்தீர்கள்"என்றாள் சம்யுக்தை.
"ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்"என்றான்.
"சொல்லுங்கள்"என்றாள்.
"உங்கள் நாட்டின் மந்திரி சபையில் ஏதேனும் முக்கிய பங்கு வகுத்தீர்களா"என்றான்."இல்லை.எனக்கும் ஆட்சி புரியும் மன்னர் சபைக்கும் எந்த வித தொடர்பும் இல்லை"என்றாள்.
"உங்களுக்கு நான் ஒரு வாய்ப்பு தந்தால் நீங்கள் அதை ஏற்று கொள்வீர்களா"என்றான்.
சம்யுக்தை அவனை அதிர்சியாக பார்த்தாள்.நாட்டின் விஷயம் பற்றி பேசினாலே இது பெண்களுக்கான விஷயம் இல்லை நீ தலையிடாதே என்று கூறுவார் தேவராயன்.தன் திறமைகளை ஒடுக்கி வைத்ததாலொ என்னவோ அவளுக்கு அவள் மீதே நம்பிக்கை ஏற்படவில்லை.
"மன்னர் சபையில் பெண்ணாகிய நான் என்ன செய்வது"என்றாள்.பார்த்திபன் உரக்க சிரித்தான்.
"இந்த உலகம் இயங்குவதே பெண்களால் தானே.இந்த நாட்டை ஆண்களாகிய எங்களை விட பெண்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.மக்களின் தேவைகளை உங்களால் நன்கு புரிந்து செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்."என்றான்.சம்யுக்தை வாய் அடைத்து போனாள்.இப்படி பட்ட ஆண்களும் இருக்கிரார்கள் என்று நினைக்கும் போது அவளுக்கு புல் அறித்தது.
"சரி நான் ஏற்றுக் கொள்கிறேன்.நான் என்ன செய்ய வேண்டும்"என்றாள்"நல்லது.அதை நான் பிறகு சொல்கிறேன்.இப்போது நீங்கள் போகலாம்"என்றான்.
எதையோ வென்ற வியப்புடன் நிமிர்ந்து சென்றாள் சம்யுக்தை.
மன்னர் சபை கூடியது.பார்த்திபனின் இருக்கை நடுவிலும் அதற்கு இரு புறமும் மந்திரிகள் அமர்ந்து இருக்கும் இருக்கைகள் போடப்பட்டன.
வெற்றிவீரன் பக்கத்தில் ஒரு இருக்கை போடப்பட்டு இருந்தது.அது யாருக்காக என்று மந்திரிகள் குழம்பி போயினர்.
மன்னர் சம்யுக்தையுடன் உள்ளே நுழைந்தார்.
அனைவரும் எழுந்து நின்றனர்.
சம்யுக்தை வெற்றிவீரன் பக்கத்தில் அமர்ந்தாள்.
வெற்றிவீரன் அவள் காதருகில் சென்று "உனக்கு இங்கே என்ன வேலை"என்றான்.
"உங்களுக்கு என்ன வேலையோ அது தான் எனக்கும் "என்றாள்.
அவன் அவளை முறைத்தான்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.