"நான் கேரள நாட்டு மன்னன் மகேந்திர பூபதியின் சமஸ்தானத்தில் படை தலைவனாக இருந்தேன்.
வாழ வழி இல்லாமல் சுற்றி திரிந்த என்னை வளர்த்து வாள் சண்டை கற்று கொடுத்து என்னை ஒரு சிறந்த வீரனாக ஆக்கியதோடு என்னை படை தலைவனாகவும் ஆக்கியவர் எனது மன்னன் மகேந்திர பூபதி.அவருடைய ஒரே மகள் அஞ்சனை.அவளை நான் என் தங்கையாக தான் நினைத்தேன்.அவளும் என்னிடம் மிக பாசமாக பழகினாள்."என்று சொல்ல ஆரம்பித்தான் வெற்றிவீரன்.அதை உன்னிப்பாக கவனித்தாள் சம்யுக்தை.அஞ்சனை மிகவும் கெட்டிக் காரி.பரதம் சங்கீதம் ஓவியம் என அனைத்திலும் சிறந்து விளங்கினாள்.ஒரு நாள் மன்னர் என்னை அரண்மனைக்கு அழைத்தார்.
"அரசே"என்று கூறி அவரை வணங்ங்கினான் வெற்றிவீரன்.
"வா வீரா.இவளுக்கு புத்தி சொல்.நான் சொல்வதை இவள் கேட்க மறுக்கிறாள்"என்றார் அரசர் வருத்தமாக.
"என்ன அஞ்சனை நீ எதை கேட்க மறுத்தாய்"என்றான் வெற்றிவீரன்.
"அண்ணா நான் சிலை வடிக்கும் கலையை கற்க ஆசை படுகிறேன்"என்றாள் அவள்.
"இது நல்ல விஷயம் தானே அரசே.இதில் என்ன தவறு இருக்கிறது"என்றான் வெற்றிவீரன்.
"புரியாமல் பேசாதே வீரா.இவள் எங்கே சென்று கற்று கொள்ள போகிறாள் என்று கேள்"என்றார் அரசர்.
"எங்கே அஞ்சனை"என்றான் வெற்றிவீரன்.
நமது எல்லையில் இருக்கும் சிற்ப கலைஞர் முத்துலிங்க பிள்ளையிடம் கற்றுக் கொள்ள ஆசை படுகிறாள்.அங்கே செல்ல காட்டுப் பகுதியை கடந்து செல்ல வேண்டும்.மேலும் அது நமது எல்லை.பக்கத்து நாட்டு அரசரோடு நாம் சுமூகமான உறவில் இல்லை.அவனால இவளுக்கு எதும் ஆபத்து வந்து விட்டால்.இவள் போக கூடாது"என்றார் அரசர் உறுதியாக.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.