வெற்றிவீரன் சற்று அமைதியாக இருந்தான்.சம்யுக்தையும் அவனும் காட்டுப் பகுதியில் இருக்கும் குளத்தின் சுவற்றில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
"அதற்கு பிறகு என்ன ஆனது"என்றாள் சம்யுக்தை.வெற்றிவீரன் பெருமூச்சு விட்டான்.
"இருவரும் ஆனந்தமாய் வாழ்ந்தனர்.நான் பார்த்திபனின் படை தலைவன் ஆனேன்.அஞ்சனையும் பார்த்திபனோடு ஆட்சி புரிய ஆரம்பித்தாள்.அப்போது ஒரு நாள் பக்கத்து நாட்டு அரசரிடம் இருந்து புறா மூலம் தகவல் வந்தது.ஏதோ ஒரு விஷயத்தை பற்றி ஆலோசனை செய்ய அவர் நம் தமிழகத்துக்கு வருகை தருவதாக தகவல்.
உடனே நாங்கள் அவரை வரவேற்க எல்லா ஏற்பாடும் செய்தோம்.பார்த்திபனும் அஞ்சனையும் அவருக்காக வாசலில் காத்து இருந்தனர்.மங்கள வாத்தியங்கள் முழங்க தனது குதிரை பூட்டிய வண்டியில் வந்து இறங்கியது வேறு யாரும் இல்லை உன் கணவன் தேவராயன்.
அவனை ராஜ மரியாதையோடு வரவேற்று அரண்மனைக்குள் வரவேற்றோம்.
அரச சபைக்கு அவனை அழைத்து சென்றோம்.
பார்த்திபனின் அருகில் அஞ்சனை அமர்ந்தாள்.தேவராயன் பக்கத்தில் நான் அமர்ந்தேன்.
"வணக்கம் அரசே.உங்களை பற்றி நான் நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன்"என்றான் தேவராயன்."வணக்கம் தேவராயன் அவர்களே.நீங்கள் எங்கள் நாட்டுக்கு வந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.என்ன விஷயமாக எம்மை பார்க்க விரும்பினீர்கள்?"என்றான் பார்த்திபன்.
"சென்ற வாரம் வெளிநாட்டு நிருவணத்தின் உரிமையாலர் ஒருவர் என்னை வந்து சந்தித்தார்.அவர்களின் குளிர் பானத்தை நமது நாட்டில் விற்பதை பற்றி பேசினார்கள்.நமது நாட்டில் விற்க நாம் சம்மதம் தெரிவித்தால் வரும் லாபத்தில் பாதியை நமக்கு கொடுப்பதாக கூறுகிறார்கள்"என்றான் தேவராயன்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.