வெற்றிவீரனும் வைத்தியரும் அந்த மலையின் அடிவரத்துக்கு சென்றனர்.குதிரையில் இருந்து இறங்கி இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.மிகவும் மோசமான மலை பகுதி அது.கற்களும் முற்களும் அவர்களின் கால்களை காயப்படுத்தின.அந்த கஷ்டத்தை பொருட்படுதாமல் இருவரும் மேலே ஏறினர்.
"வைத்தியரே இப்படி ஒரு விஷத்தை முறிக்கும் மூளிகை மேலே உள்ளது தெரிந்து இருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாமே யேன் யாரிடமும் கூறாமல் இருந்தீர்கள்.
"இந்த மூளிகையை எடுத்து விற்க முடிவு செய்து பல பேர் இங்கே வந்தார்கள் ஆனால் யாரும் உயிரோடு திரும்பவில்லை.இவ்வளவு ஆபத்தான இடம் என்பதால் நான் யாரிடமும் இதை பற்றி கூறவில்லை."ஓ அப்பொழுது நாமும் திரும்ப மாட்டோமா"என்றான் வெற்றிவீரன்.
"பாம்பு சிவனின் வாகனம்.நாம் ஒரு நல்ல நோக்கத்துடன் இதை எடுக்க செல்கிறோம் எனவே அந்த ஈசன் நம்முடம் இருப்பார் என்று நம்புகிறேன்"என்றார் வைத்தியர்.
சம்யுக்தையின் பாதம் நீலமாக மாறியது.அதை கண்ட பார்த்திபன் பதறி போனான்.
"என்ன இது இவள் பதம் நிறம் மாறுகிறது"என்றான் வைத்தியரின் உதவியாளரிடம்."விஷம் அவர் உடம்பில் மெதுவாக ஏறிக் கொண்டு இருக்கிறது.பாதி உடம்புக்கு மேல் ஏறிவிட்டால் மூளிகை வைத்தியம் பழிக்காது"என்றான்.
பார்த்திபனின் முகம் இருன்டு போனது.சிவ பெருமானே இவள் பிழைக்க வேண்டும்.காப்பாற்று என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
மேலே ஏற ஏற சுவாசிப்பது கடினமானது.இருவருக்கும் மூச்சு இறைத்தது.வைத்தியர் மிகவும் முதியவர்.அவரால் நடக்க முடியவில்லை.
"தளபதி அவர்களே என்னால் இதற்கு மேல் நடக்க முடியவில்லை"என்றார் அவர்.
"வைத்தியரே நீங்கள் வந்தால் தானே மூளிகையை நான் அடையாளம் காண முடியும்"என்றான் வெற்றிவீரன்.
"மன்னித்துவிடுங்கள் என்னால் நடக்க முடியவில்லை"என்று கூறி கீழே அமர்ந்தார் அவர்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.