அதிர்ச்சியில் இருந்து மீழ பார்த்திபனுக்கு சில நொடிகள் அயின.
"நடந்த குழப்பங்களுக்கு நான் வருந்துகிறேன்.எனக்கு என் மக்களின் நலன் நன் முக்கியம்.உங்கள் வியபாரத்தை உடனடியாக நீங்கள் நிறுத்த வேண்டும்.இந்த கூடாரத்தை கலைத்து விட்டு என் நாட்டை விட்டே வெளியேற வேண்டும்.என் கட்டளை இது.மீறினால் என்ன ஆகும் என்று உனக்கே தெரியும்"என்றான் பார்த்திபன்."சரி அரசே நான் இன்றே நாட்டை விட்டு செல்கிறேன்"என்றான் அந்த வியாபாரி.
பார்த்திபனின் அரச சபை
தேவராயனை தாங்கள் பார்க்க வேண்டும் என்ற செய்தியை அவருக்கு தெரிய படுத்திவிட்டொம்.இன்னும் சில மணி நேரத்தில் அவர் இங்கே வருவார்"என்றான் வீரன் ஒருவன்."உத்தரவு இடு பார்த்திபா அவன் தலையை சீவி விடுகிறேன்"என்றான் வெற்றிவீரன்.
"வேண்டாம்"என்றான் பார்த்திபன்.
"ஏன்"
"இதை பற்றி அவன் என்ன சொல்ல போகிறான் என்று கேட்க வேண்டும்"என்றான்.ஒரு மணி நேரம் கழித்து தேவராயன் வருகிறார் என்று ஒரு வீரன் அறுவித்தான்.
உள்ளே நுழைந்த தேவராயன் பார்த்திபனை கட்டி தழுவினான்.
"எதற்காக தோழா என்னை அவசரமாக அழித்தாய்"என்றான் தேவராயன்."நான் சம்மதித்ததாக கூறி மது வியாபாரியிடம் ஒப்பந்தம் செய்தாயா?"என்றான் கோவமாக.
தேவராயனின் முகம் இருந்து போனது.
"இல்லை நீ தவறாக புரிந்து கொண்டாய்"என்று அரம்பித்தான்.
"எனக்கு எல்லாம் தெரிந்து விட்டது.ஏன் இப்படி செய்தாய்.நான் ஆரம்த்திலேயே இதற்கு மறுப்பு தெரிவித்தும் ஏன் இப்படி செய்தாய்"என்று கத்தினான்.
தேவராயன் சிரித்தான்.
"செல்வம் பார்த்திபா.அவன் எனக்கு தங்கம் வைரம் பொற்காசுகள் தருவதாக கூறினான்.இந்த உலகமே செல்வத்தால் தானே இயங்குகிறது"என்றான்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.