மெதுவாக நகர்ந்து செங்கல்வராயன் இருக்கும் பக்கம் சென்றாள்.செங்கல்வராயன் அவளை ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவள் அவனுக்கு மாலை போடுவது உறுதியானது.பார்த்திபனின் மனம் ஏனோ வருத்தம் அடைந்தது.அவள் மாலை அணிவதை பார்க்ன முடியாமல் மெதுவாக அங்கே இருந்து நகர்ந்து அவன் அறைக்கு சென்றான்.அதை வெற்றிவீரன் கவனித்தான்.
அவனை பின் தொடர்ந்தான்.
பார்த்திபன் தனது ஜன்னல் வழியாக வெளியே வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தான்.சம்யுக்தை நேற்று இரவு அவனை சந்தித்து பேசியது நினைவுக்கு வந்தது.
சுயம்வர வேலைகளில் அவன் பரபரப்பாக இருந்த போது தன்னிடம் பேச வேண்டும் என்று அவள் கூறினாள்.இருவரும் அவன் அறைக்கு சென்றனர்.
"என்ன சம்யுக்தை சொல்லு"என்றான்.அவள் சற்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.
"நான்...... அதாவது எனக்கு இந்த சுயம்வரம் எதற்கு?"என்றாள்."உனக்கு ஒரு துணை வேண்டாமா.எத்தனை நாட்கள் என்னோடு இருப்பாய்.மக்கள் நம்மை தவறாக பேச் கூடும்"என்றான்.
"அப்படி என்றாள் எதற்காக என்னை இன்கே அழைத்து வந்தீர்கள்"என்றாள்.
"சொல்கிறேன்.நீ தெரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது.உன் கணவனை கொன்ற்துக்கு காரணம் உள்ளது.அவன் ஒரு துரோகி"என்றான்.
"அந்த துரோகியின் கதை எனக்கு தெரியும்"என்றாள்.
பார்த்திபன் அதிர்ச்சி அடைந்தான்.
"உனக்கு எப்படி தெரியும்"என்றான் கண்கள் கலங்கிய படி."வெற்றிவீரன் அண்ணாவை வற்புருத்தி கூற வைத்தேன்"என்றாள்.
பார்த்திபன் கோவம் அடைந்தான்.
"கோவம் அடைய தேவையில்லை தவறு என் மீது தான்"என்றாள்."சரி அவன் செய்த துரோகத்துக்கு பரிசாக மரண தண்டனை தந்தேன் ஆனால் நீ என்ன தவறு செய்தாய்.விதவையாக வாழ்வது மீக கடினம்.ஆண்களின் கண்கள் உன் மீதே இருக்கும்.உன்னை அடையும் வரை ஓய மாட்டார்கள்.எனவே உனக்கு பாதுகாப்பு கொடுக்க உன்னை இங்கே அழைத்து வந்தேன்.உன் கற்பை நீயே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல வித தற்காப்பு கலைகளை கற்று கொடுத்தேன்.உன் நாட்டை ஆளும் திறனை வளர்க்க உன்னை அமைச்சர் ஆக்கினேன்.நீ இதை சரி வர செய்து வந்தாய் எனவே உன்னை உன் நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தேன்.ஆனால் உனக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை.வெற்றிவீரன் மூலமாக தெரிந்து கொண்டேன்.எனவே உனக்கு ஒரு சிறந்த கணவனை அமைத்து தர முடிவு செய்தேன்"என்றான்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.