தேவராயன் மெதுவாக அவன் பேசாலும் நடிப்பாலும் பார்த்திபனின் மனதை வென்று அவன் உயிர் தோழன் ஆனான்.ஆனால் வெற்றிவீரன் மட்டும் இவனை பற்றி எப்படி சொல்வது.சொன்னால் நம்புவான என்ற தவிப்பில் இருந்தான்.ஒரு நாள் தேவராயனை பற்றி எச்சரிக்கை செய்தான் ஆனால் பார்த்திபன் அதை பெரிதாக எடுத்த்க் கொள்ளவில்லை.பார்த்திபனும் தேவராயனும் அடிகடி சந்தித்தனர்.ஒன்றாக வேட்டைக்கு செல்வது என்று இனை பிரியாத நண்பர்கள் ஆனார்கள்.பார்த்திபனின் நாட்கில் தேவராயனுக்கு மரியாதை கூடியது.
மூன்று மாதங்கள் ஒடின.
ஒரு நாள் ஊர் மக்களில் சிலர் பார்த்திபனை சந்திக்க வந்தனர்."வருங்கள் .அமருங்கள்.என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தீர்கள்" என்றான் பார்த்திபன்.
"அரசே மக்களை காக்க வேண்டிய நீங்களே இப்படி ஒரு கரியத்தை செய்யலாமா?"என்றாள் ஒரு பெண்.
"நான் என்ன செய்தேன்"என்றான் குழப்பமாக."அரசே என் கணவன் தினமும் குடித்து விட்டு வந்து என்னையும் என் குழந்தைகளையும் அடிக்கிறார்.சம்பாரிக்கும் எந்த பணத்தையும் எங்களிடம் குடுப்பது இல்லை"என்றாள் அவள்.
"அப்படியா ஆனால் நம் நாட்டில் அப்படி பட்ட சோம பானங்கள் தடை செய்யப்பட்டுள்ளதே.அவனை உடனே அழைத்து வாருங்கள்."என்றான்.
அரை மணி நேரத்துக்கு பிறகு அவன் அழைத்து வரப்பட்டான்.
"என்ன மாரி தடையை மீறி யார் உனக்கு மது விற்றது.என்ன இது புது பழக்கம்"என்றான் கோவமாக."அரசே என்னை மண்ணித்து விடுங்கள்"என்று கூறி காலில் விழுந்தான்.
"எழுந்துரு நடந்ததை கூறு"என்றான் பார்த்திபன்.
"ஒரு நாள் வயலில் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தேன்.அப்போது ஒருவர் வந்து நீ மிகவும் சோர்வாக இருக்க இதை குடித்தால் மனசு அமைதி பெரும் உடல் வலி எல்லாம் பொய் விடும் என்று சொன்னார்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.