என்னவென்று புரியாமல் தன் அறையின் முன் நின்று இருந்தாள் சம்யுக்தை.மேலே சென்ற பணி ஆள் தட தடவென கீழே இறங்கி வந்தான்.
"அரசர் உங்களை அழைக்கிறார்"என்றான்.அவள் மனம் பதறியது.அவனுக்கு மகிழ்ச்சியை குடுக்கும் என்று நம்பி அவள் செய்த காரியம் அவனுக்கு கோவத்தை வர வைத்ததோ என்று யோசித்துக் கொண்டே மெதுவாக மேலே சென்றாள்.
அந்த அறையின் முன் மிக கோவமாக கைகளை பின்னால் கட்டிக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்.
வெற்றிவீரன் அவன் அருகில் நின்று கொண்டு இருந்தான்.
சம்யுக்தை வெற்றிவீரனை பார்த்தாள்.அவன் வருத்தமாக அவளை பார்த்தான்."என்னை வர சொன்னீர்களா"என்றாள் நடுங்கின குரலோடு.
நடப்பதை நிறுத்திவிட்டு அவளை கோவமாக பார்த்தான்.
"இந்த அறையை சுத்தம் செய்யும்படி கூறினாயா?"என்றான்."மிகவும் அழுக்காக இருந்தது....."என்று எதையோ கூற துவங்கினாள்.
"கூறினாயா இல்லையா"என்றான் அவளை முறைத்தபடி.
"ஆம் கூறினேன்"என்றாள்.
"யாரை கேட்டு கூறினாய்.என் பணி அட்களை ஆனையிட உனக்கு யார் அதிகாரம் தந்தது"என்று கத்தினான்.
சம்யுக்தையின் கால்கள் நடுங்கின.
"என் பணி ஆட்கள் எவரும் இந்த அறைக்குள் நுழைய நான் தடை விதித்து இருந்தேன்.என் கட்டளையை மீறும் படி சொன்னது ஏன்"என்றான்.
சம்யுக்தை எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள்.
"பேசு"என்று கத்தினான்.
சம்யுக்தை பயந்து போனாள்.
வெற்றிவீரன் அவன் தோளில் கை வைத்தான்.
"தெரியாமல் செய்துவிட்டர்கள்.மன்னித்து விடு"என்றான்.பார்த்திபன் அவனை முறைத்தான்.
"இங்கே நீ ஒரு விருந்தாளி.என் அனையை மீருவதற்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை.இந்த அரண்மனையில் இருக்கும் அனைவரும் என் கட்டளையை தான் பின் பற்ற வேண்டும்"என்று கூறி வேகமாக சென்றவன் மீண்டும் வந்து அவள் முன் நின்றான்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.