வாளை கையில் எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.அவனை சுற்றி நூற்றுக்கும் மேலான பாம்புகள் அவனை கொத்த படம் எடுத்துக் கொண்டு இருந்தன.தன் வாளை வைத்து ஒரு சில பாம்புகளை வெட்டினாலும் கண்டிப்பாக மற்ற பாம்புகள் இவனை கொத்திவிடும்.என்ன செய்வது என்று யோசித்தான்.
"சிவபெருமானே நான் வாழ வேண்டும்.சம்யுக்தையின் உயிரை காபாற்ற நான் வாழ வேண்டும்.ததவு கூர்ந்து எனக்கு உதவி செய்"என்று கூறி ஒரு சிவன் பாடலை மனம் உருகி பாடினான்.
திடீரென ஒரு வெளிச்சம் அவன் கண்ணை குருடு ஆக்கியது.கண்ணை திறக்க முடியவில்லை.அங்கே இருந்து ஒரு அடி நகர்தால் கூட பாம்புகள் அவனை இறை ஆக்கிவிடும்.அதனால் கண்களை மற்றும் மூடிக் கொண்டு அங்கேயே நின்று இருந்தான்.மெது மெதுவாக வெளிச்சம் குறைய ஆரம்பித்தது.5 நிமிடம் கழித்து முற்றிலுமாக வெளிச்சம் நின்றது.மெதுவாக கண்களை திறந்தான்.அங்கே பாம்புகள் எதுவும் இல்லை.சுற்றி தேடி பார்த்தான் ஆனால் எதுவும் இல்லை.
சிவ பெருமானுக்கு நன்றி கூறிவிட்டு அங்கே இருந்து வேகமாக புறப்பட்டான்.கூடையை தூக்கிக் கொண்டு மெதுவாக கீழே இறங்கினான்.வைத்தியர் ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு இருந்தார்.
"வந்துவிட்டாயா.உனக்கு எதாவது ஆகிவிட்டதோ என்று எண்ணி பயந்து கொண்டு இருந்தேன்"என்றார்.இருவரும் விரைவாக கீழே சென்றார்கள்.அங்கே இருந்து குதிரையில் அரண்மனைக்கு சென்றனர்.
சம்யுக்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் வைத்தியர்.அவள் பாதி உடல் நீலமாக மாறி இருந்தது.
அவர் முகம் மாறியது.எனினும் மூளிகையை கசக்கி சாரை எடுக்க ஆரம்பித்தார்.
பார்த்திபன் வெற்றிவீரனை கட்டி அனைத்தான்.
"உன் உயிரை பனயம் வைத்து இந்த காரியத்தை செய்துள்ளாய்.மிக்க நன்றி"என்றான் பார்த்திபன்."உன் உயிரை காட்டிலும் என் உயிர் பெரிதல்ல.நீ இவளோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்"என்றான் வெற்றிவீரன்.
வைத்தியர் மூளிகை சாரை அவள் வாயில் ஊற்றினார்.10 நிமிடங்கள் கழிந்தும் விஷம் இறங்கவில்லை.
அவர் முகம் தோய்வாக காணப்பட்டது.
வெற்றிவீரனை ரகசியமாக அழைத்தார்.
"நாம் பட்ட கஷ்டம் எல்லாம் வீண் ஆகிவிடும் போல் உள்ளது.நாம் கால தாமதமாக வந்து விட்டோம்.இவள் உடலின் பாதி விஷமாகிவிட்டது.இனி மூளிகை மூலம் இவள் பிழைப்பது கடினம்.என்ன செய்வது என்று தெரியவில்லை."என்றார்.உண்மை தெரியாத பார்த்திபன்.அவள் எப்போது கண் முழிப்பாள் என்று ஆவலாக பார்த்துக் கொண்டு இருந்தான்.
வெற்றிவீரன் அவன் முகத்தை பார்த்து துயரம் அடைந்தான்.
"இரண்டாவது முறையாக இவன் ஏமாந்து போகப் போகிறானே"என்று எண்ணுகையில் மனம் வேதனை அடைந்தது."நீங்கள் யாரிடமும் எதுவும் கூற வேண்டாம்.மருந்து பழிக்க சில மணி நேரம் ஆகும் என்று கூறுங்கள்"என்றான்.
சம்யுக்தையின் பக்கத்தில் சென்று அமர்ந்தான் வெற்றிவீரன்.
"நீ என் தங்கை நான் உன்னை கண்டிப்பாக பிழைக்க வைப்பேன்"என்றான்.
அவள் அருகில் அமர்ந்து கொண்டு இருந்த பார்த்திபனை பார்த்தான்.மெலிதாக சிரித்தான்.
பின் விடு விடுவென சிவன் இருக்கும் பூஜை அறைக்கு சென்றான்.கதவை தாழிட்டான்."இறைவா என் வாழ்க்கை பாலைவனம் போன்றது அது இனி தழைக்க தேவையில்லை.நான் உன் உண்மையான பக்தன் என்று நினைதாயானால் என் உயிரை எடுத்துக் கொண்டு அவள் உயிரை கொடுத்துவிடு"என்று கூறி.தன் வாளை தன் இடுப்பில் இருந்து எடுத்தான்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.