சம்யுக்தை பார்த்திபனை பயந்த கண்களோடு பார்த்தாள்.
ஆனால் பார்த்திபனின் முகத்தில் எந்த வித கலவரமும் இல்லை.பார்த்திபன் புன்னகைத்தான்.
"நாம் எல்லாம் வீர பரம்பரையை சேர்ந்தவர்கள்.ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்றால் நமது வீரத்தை வெளிக்காட்டி அவளின் மனதை கொள்ளை கொள்ள வேண்டும் அல்லவா"என்றான் பார்த்திபன்.சம்யுக்தை வேண்டாம் என்பதை போல அவன் கையை தொட்டாள்.
பார்த்திபன் அவளை பார்த்து கவலை படதே என்பதை போன்று தலை அசைத்தான்."சரி என்ன செய்ய வேண்டும்"என்றான் செங்கல்வராயன்.
"செங்கல்வராயா என்ன இது.இவர்கள் நமது விருந்தினர்கள்.இவர்களை அவமதிபதை போன்று நடந்து கொள்ளாதே"என்றார் கரிகாலன்.
"இருங்கள் அப்பா நமது நாட்டின் ஒரு பகுதியை கேட்டு வந்து இருக்கிறார்கள்.அதை தானமாக கொடுப்பதா.அதற்கு ஒரு விலை இருக்கிறது அல்லவா.இவளை தந்து கிராமத்தை பெற்று கொள்ளட்டும் தமிழ் நாட்டு அரசர்"என்றான்.
"என்னோடு வாள் சண்டையிடு.வெற்றி பெற்றால் சம்யுக்தையும் கிராமமும் உன் சொத்து.இல்லையேல் இரண்டும் என்னுடையது ஆகும்"என்றான் பார்த்திபன்.
"அதையும் தான் பார்ப்போமே"என்றான் செங்கல்வராயன்.
"அரசே என்ன இது என்னை பந்தையமாக வைத்து என்ன விளையாட்டு இது"என்றாள் சம்யுக்தை கோவமாக.
"என் மீது நம்பிக்கை கொள்.கிராமம் நம்முடையது ஆக்குவேன்"என்றான் பார்த்திபன்.
வாள் சண்டை தொடங்கியது.சம்யுக்தை ஒரு பதட்டத்தோடு கரிகாலன் அருகில் அமர்ந்து கொண்டு இருந்தாள்.
கரிகாலனுக்கு இந்த சண்டையில் சிறிதும் விருப்பம் இல்லை ஆனால் செங்கல்வராயன் கேட்பதாக இல்லை.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.