தேவராயனின் உடல் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது.சம்யுக்தை சிவன் கல் அடியில் விழுந்து அழுது கொண்டு இருந்தாள்.
"அரசியாரே மன்னரின் உடல் வந்து விட்டது",என்றாள் முல்லை.
சம்யுக்தை எழுந்து வாசலுக்கு ஓடினாள்.தேவராயனின் குருதி படிந்த அந்த உடலை பார்த்து தேம்பி தேம்பி அழுதாள்.
அவளுக்கு யாராலும் சமாதானம் சொல்ல முடியவில்லை.
மக்கள் அனைவரும் தம் அரசனை இழந்த சோகத்தில் மூழ்கினார்கள்.
ராஜ மரியாதையோடு அரசனின் உடல் அவன் மதப்படி எரிக்கப்பட்டது.சுடுகாடு செல்வதற்கு பெண்களுக்கு அனுமதி இல்லாததால் சம்யுக்தையும் மற்ற பெண்களும் அரண்மனையிலேயே இருந்தனர்.
அன்று இரவு ஒரு விதவை பெண்ணுக்கு நடத்த வேண்டிய சடங்குகளை எல்லாம் சம்யுக்தைகு நடத்த முற்ப்பட்டனர்.அவளை குளிக்க வைத்து முகத்தில் கடைசி முறையாக மஞ்சள் தடவி பெரிய குங்கும பொட்டு இட்டு.பட்டுப் புடவை கட்டி அழைத்து வரப்பட்டாள்.அவளை அந்தபுரத்தின் முற்றத்தில் அமர வைத்தனர்.அவளை பல பெண்கள் சூழ்ந்தனர்.ஆண்களுக்கு அந்தபுரத்தில் அனுமதி இல்லாததால் அவர்கள் யாரும் வரவில்லை.
ஒரு வயதான மூதாட்டி அழுது கொண்டே சம்யுக்தாவை நோக்கி வந்தாள்."தீர்க்க சுமங்களி என்று உன்னை வாழ்த்தினேனே.இப்படி ஆகிவிட்டதே என்று கதறினார்.
சம்ய்க்தை கல்லு போல அசையாமல் அமர்ந்து இருந்தாள்.
அவள் பொட்டு அழிக்கப்பட்டது.அவள் பூ அவளிடம் இருந்து பரிக்கப்பட்டது.மஞ்சள் முகத்தை கழுனார்கள்.அவளின் தாளி கழற்றப்பட்டு கீழே வைத்து இருந்த பால் நிறைந்த கின்னத்தில் போடப்பட்டது.அவள் மேல் வெள்ளை துணி போர்த்தப்பட்டது.அவளை உள்ளே அழைத்து சென்றனர்.
அவள் வெள்ளை உடையில் தன்னை புகுத்திக் கொண்டாள்.ஆபரணம் எதுவும் போடவில்லை.பொட்டு வைக்கவில்லை.பூவும் வைக்கவில்லை.உடையை மற்றிவிட்டு வெளிப்பட்ட போது முல்லை ஓடி வந்து அவளை கட்டி அனைத்து அழுதாள்.
"அரசியாரே உங்களை இந்த கோலத்தில் என்னால் பார்க்க முடியவில்லை.எங்கே உங்கள் சிரிப்பு,எங்கே உங்கள் கம்பீரம்.எங்கே உங்கள் வசீகரமான முகம்.இது அந்த கடவுளுக்கே அடுக்காது",என்று கூறி அழுதாள்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.