சம்யுக்தை அன்று இரவு முழுவதும் யோசித்துக் கொண்டே இருந்தாள்.
தன்னை ஏமாற்றி தன் வாழ்க்கையை பரித்தவனை பழி அங்கியே தீர வேண்டும் என்று எண்ணி ஒரு திட்டத்தை தீட்டினாள்.
அவன் குடிக்கும் எதிலாவது விஷத்தை கலந்து கொடுக்கலாம் ஆனால் அவன் துடி துடித்து சாக வேண்டும் எக்காரணம் கொண்டும் பிழைத்து விட கூடாது என்று நினைத்தாள்.ஒரு முடிவுக்கு வந்தாள்.காலையில் வெகு விரைவாக எழுந்தாள்.வெளியே எட்டி பார்த்தாள்.யாரும் இன்னும் எழவில்லை.ஒரு கையில் தீ பந்தத்தையும் இன்னூரு கையில் விஷம் தடவிய கத்தியையும் எடுத்துக் கொண்டு மெதுவாக மாடி ஏறினாள்.மனது பட பட வென அடித்துக் கொண்டது .கைகள் பயத்தில் நடுங்கின.மெதுவாக படிகளை ஏறினாள்.மாடி நிசப்தமாக இருந்தது.மெதுவாக சென்று பார்த்திபனின் கதவை தள்ளினாள்.தீ பந்தத்தை ஒரு இடத்தில் வைத்து விட்டு கதவை அவள் பின்னாள் சாத்தினாள்.பார்த்திபன் நங்கு உறங்கிக் கொண்டு இருந்தான்.
அவன் அருகில் சென்று நின்றாள்.அவன் முகம் குழந்தையை போல அழகாக இருந்தது.தன்னை மறந்து அவனை ரசித்துக் கொண்டு இருந்தாள்.அவன் தூக்கத்தில் ஏதோ உளறினான்.சம்யுக்தை பதட்டம் ஆனால்.
"என்ன ஆனது எனக்கு? அவனை கொல்ல வந்து விட்டு இப்படி என்னை மறந்து அவனை ரசித்துக் கொண்டு இருக்கிறேனே"என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள்.தனது கணவனை நயவஞ்சகமாக சதி செய்து கொன்றது நினைவுக்கு வரவே தனது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இரு கைகளாலும் கத்தியை இருக்கி பிடித்துக் கொண்டு அவனை குத்துவதற்கு ஓங்கினாள்.
அப்போது அவன் "அஞ்சனை என் பிரியமான அஞ்சனை"என்று உளறினான்.
சம்யுக்தை சற்று என்று நின்றாள்.
"அஞ்சனை யா.இவன் தூக்கத்தில் புலம்புவதை கேட்டாள் இந்த அரண்மனையில் ஒளிந்திருக்கும் மர்மமத்தை கண்டுபிடிக்கலாம்" என்று எண்ணினாள்.
அவன் மீண்டும் எதுவோ ஒன்று சொல்ல அது அவள் காதில் விழவில்லை.மெதுவாக குணிந்து அவன் அருகே சென்று என்ன சொல்கிறான் என்று கவனித்தாள்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.