மறுநாள் காலை வெற்றிவீரன் அதிகாலையிலேயே பார்த்திபனை சந்திக்க வந்தான்.
பார்த்திபன் வாள் பயிற்சிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தான்.
"பார்த்திபா உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்"என்றான்."என்ன இவ்வளவு காலையில்"என்றான் பார்த்திபன்.
"சம்யுக்தைக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைத்துவிட்டான்.அவன் இன்று நம் அரண்மனைக்கு வந்து சம்யுக்டையை பெண் பார்க்க போகிறான்"என்றான்.
பார்த்திபனின் முகம் இருகி போனதை வெற்றிவீரன் கவனிக்க தவறவில்லை.
"ஏன் உன் முகம் வாடி போனது.இந்த திருமணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா?"என்றான் வெற்றிவீரன்.
"இல்லை இல்லை எனக்கு ஏன் விருப்பம் இல்லாமல் போக வேண்டும்.வரட்டும்"என்றான்.
வெற்றிவீரனுக்கு அவன் முகத்தை பார்க்கையில் சிரிப்பு வந்தது.
"சரி தட்புடலான விருந்து ஏற்பாடு செய்ய வேண்டும்.அவரை நங்கு வரவேற்க வேண்டும்"என்றான் வெற்றிவிரன்.
பார்த்திபன் பதில் எதுவும் சொல்லவில்லை.
"மாப்பிள்ளை யார் என்று நீ கேட்கவே இல்லையே.அவர் பெருமையை சொல்லட்டுமா"என்றான்.
பார்த்திபனின் முகம் நெருப்பாக மாறியது.
"வேண்டாம் அவர் வரும் போது அவரை பற்றி தெரிந்து கொள்கிறேன்."என்றான்.வெற்றிவீரன் அவனை கிண்டலாக பார்த்து சிரித்துவிட்டு அங்கே இருந்து சென்றான்.
தடபுடலான ஏற்பாடு செய்யப்பட்டது.மாப்பிள்ளை குதிரை வண்டியில் வந்து இறங்கினார்.
வெற்றிவீரன் மாலை அணிவித்து சிறப்பித்தான்.அவரை அரச சபைக்கு கூட்டி வந்தான்.
பார்த்திபன் அவர்களை பார்த்தான்.உறவினர்கள் சிலர் தென்பட்டனர் ஆனால் மாப்பிள்ளை எங்கே சென்றார் என்று அவனுக்கு தெரியவில்லை.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.