அறையை சுத்தம் செய்ததில் பார்த்திபன் கோவம் அடிந்ததை அடுத்து வேறு எந்த வழியில் அவனை மகிழ்ச்சி படுத்துவது என்று எண்ணினாள் சம்யுக்தை.தோட்டத்தில் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள்.வெற்றிவீரன் அங்கே வந்தான்.
"சம்யுக்தை"என்றான்.
அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
"வாருங்கள் அண்ணா"என்றாள்."என்ன உன் முகம் வாடி போய் இருக்கிறது"என்றான்.
"ஆம் அண்ணா அவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து ஒரு காரியம் செய்தேன் ஆனால் அது தோல்வியில் முடிந்தது"என்றாள் வருத்தமாக.
"அது தோல்வி அடைந்தது என்று கூற முடியாது.அது கண்டிப்பாக ஒரு வகையில் வெற்றி தான்"என்றான்.
"எப்படி?"
"ஆம் அவன் கோவப்பட்டான் ஆனால் உன்னை வெறுக்கவில்லை.அதனால் தான் நீ இன்னும் இந்த அரண்மனையில் இருக்கிறாய்"என்றான்.
அவள் பெருமூச்சுவிட்டாள்.
"வேறு எப்படி அவர் மனதில் இடம் பிடிப்பது"என்றாள்.
"உனக்கு இசையில் ஆர்வம் உள்ளதா.எங்கே ஒரு பாடலை பாடு"என்றான்.
அவள் ஒரு பாடலை பாடினாள்.வெற்றிவீரன் அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.
"போதும் இப்படி நீ பாடினால் அவனுக்கு இசையில் இருக்கும் ஈடுபாடே போய்விடும்.நாம் இதை விட்டு விடுவோம்"என்றான்.
"போங்கள் அண்ணா நான் நன்றாக தானே பாடினேன்"என்றாள்.
"சரி நாட்டியம் ஆட தெரியுமா"என்றான்.
அவள் யோசித்தாள்.
"தெரியாது ஆனால் முயற்சி செய்கிறேன்"என்றாள்."வேண்டாம் வேண்டாம் பாட்டே அப்படி பாடினாய்.நீ நாட்டியம் எல்லாம் முயற்சி செய்தால் அவன் மயக்கம் அடைந்து விடுவான்"என்று கூறி சிரித்தான்.
"அண்ணா"என்று கூறி முறைத்தாள்.
"சரி சரி ஓவியம் அல்லது சிலை வடித்தல் எதாவது தெரியுமா"என்றான்.
"தெரியது அண்ணா"என்றாள் சோகமாக.
"வேறு என்ன தான் செய்வாய் நாள் முழுவதும்"என்றான்.
"நான் அந்த புறத்தில் என் தோழிகளோடு பல்லாங்குழி தாயம் எல்லாம் விளையாடிக் கொண்டு இருப்பேன்"என்றாள்.
வெற்றிவீரன் பெருமூச்சு விட்டான்.
"உனக்கு கலை சரிபட்டு வராது.உன் புத்தி கூர்மையை வைத்து அவன் மனதில் இடம் பிடி"என்றான்.
"எப்படி"என்றாள்.
"மக்களின் பிரச்சனைகளை அலசி அதற்கு ஒரு நல்ல தீர்வு தந்தால் கண்டிப்பாக அவன் மனதில் இடம் பிடிக்க முடியும்.ஏன் என்றால் அவனுக்கு மக்கள் தான் உயிர்"என்றான்.
"சரி நான் நாளை முதல் மக்களை நேரில் சந்தித்து பேசுகிறேன்"என்றாள்.
"நல்லது"என்றான்.
"அண்ணா"
"சொல்லுமா""நீங்கள் எப்போதும் பார்த்திபன் பற்றியே எண்ணிக் கொண்டு இருக்கிறீர்களே உங்கள் வாழ்க்கையை பற்றி எப்போதாவது நினைத்ததுண்டா"என்றாள்.
"என் வாழ்க்கை பிறர் போட்ட பிச்சை.முதலில் மகேந்திர பூபதி இப்போது பார்த்திபன்"என்றான்.
"உங்கள் மனதை எந்த பெண்ணும் கவரவில்லையா?"என்றாள்.
அவன் சிரித்தான்.
என் சிறு வயதில் நான் உணவுக்கே கஷ்தப்பட்டேன்.வளர்ந்த பிறகு வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற வெறி தான் இருந்ததே தவிற காதலில் விழ நேரம் இல்லை.இப்போது காதல் செய்யும் வயதை எல்லாம் தாண்டிவிட்டேன் அம்மா"என்றான்.
அவள் அவனை வேதனையாக பார்த்தாள்.
"உங்களுக்கென்று மனைவி மக்கள் வேண்டாமா"என்றாள்."நீயும் பார்த்திபனும் பெற்று டர போகும் குழந்தை தான் என் குழந்தை.வேறு என்ன வேண்டும் என் வாழ்வில்"என்றான்.
அவள் அவனை கண் கொட்டாமல் பார்த்தாள்.
அவள் தலையை தட்டிக் கொடுத்தான்."என்னை பற்றி கவலை பட்டு நேரத்தை வீண் ஆக்கதே"என்று கூறிவிட்டு சென்றான் வெற்றிவீரன்.
"அண்ணா உன்னையும் விரும்பும் பெண் ஒருத்தி இருக்கிறாள்.நேரம் வரும் போது அவள் யார் என்று நீ தெரிந்து கொள்வாய்"என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.