ஒரு அழகிய நகரம்.பச்சை பசேல் என்று வயல்களும் பூக்களும் பூத்துக் குலுங்கின.பார்ப்பவரை பிரம்பிக்க வைக்கும் ஒரு பிரம்மான்டமான அரண்மனை அந்த நகரை இன்னும் அழகு ஆக்கியது.அந்த நகர மக்கள் அனைவரும் வறுமை என்பதே தெரியாமல் சிரிப்புடன் காணப்பட்டனர்.அதற்கு முழு முதல் காரணம் அந்த நகரத்தை ஆண்ட வந்த அரசன் தேவராயன்.அவனுடைய ஆசை மனைவி சம்யுக்தை.அந்த நகரத்தின் ஒரே அரசி அவள்.அவள் தன் கனவனை மிகவும் நேசித்தாள்.அவள் அந்தபுரத்தில் தோழிகளோடு பேசிக் கொண்டு இருந்தாள்.அந்தபுரமானது அரச குடும்பத்து பெண்கள் நேரம் கழிக்கும் இடம்.சுற்றிலும் பூந்தோட்டத்தோடு பார்பதற்கே மிகவும் அழகாக இருந்தது.அங்கே பல வகை பூக்கள் இருந்தது.தோட்டத்தில் இருந்து உள்ளே நுழைந்தாள் ஒரு பிரம்பான்டமான மண்டபம் இருந்தது.அதன் மேல் கூரையில் பல வித ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.தூன்கள் நேர்த்தியான சிலைகளால் செதுக்கப்பட்டு இருந்தது.மண்டபத்திலிருந்து குளத்துக்கு படிகள் இருந்தது.அந்த குளம் அரசி குளிக்க கட்டப்பட்டது.குளத்தின் நடுவின் ஒரு பெரிய அன்னத்தின் சிலை நின்றது.அதன் வாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டு இருந்தது.குளத்தில் இருந்து வலது பக்கத்தில் ஒரு பெரிய அறை இருந்தது.அது அரசி சம்யுக்தையின் அறை.மிக அழககவும் பல வெலை பாடுகளுடனும் கட்டப்பட்டு இருந்தது.அந்த அறையின் ஒரு ஓரத்தில் சம்யுக்தை தன் தோழிகளோடு பேசிக் கொண்டு இருந்தாள்.சம்யுக்தை அழகும் அறிவும் உடையவள்.தங்க நிறத்தில் பார்ப்பவரை வசீகரிக்கும் அற்றல் உடையவள்.அறிவில் சிறந்தவளாய் இருந்தாலும் அவள் கனவன் நாட்டை ஆளும் பொறுப்பை அவளோடு பகிந்து கொள்ளவில்லை.பெண்களின் வேலை அது இல்லை என்று அடிக்கடி சொல்லுவான்.எனினும் தன் மனைவியை அன்பாக பார்த்துக் கொள்வான்.அவளுக்கு உயர்ந்த ஆடை அனிகளன்களை வாங்கி தருவான்.அவள் மேல் மிகவும் ஆசை வைத்து இருந்தான்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.