மங்கள வாத்தியம் முழங்கியது.
பார்த்திபன் திடுக்கிட்டு விழித்தான்.முகம் எல்லாம் வெயர்த்து போய் இருந்த்து.சுற்றும் முற்றும் பார்த்தான்.அவன் தன் அறையில் அமர்ந்து கொண்டு இருந்தான்.அவன் கண்களை நம்பமல் தன் கழுத்தை தடவி பார்த்தான்.குழுத்தில் மாலை இல்லை.அருகில் இருந்த குவலையை எடுத்து தண்ணீர் குடித்தான்.சூரியம் அவன் முகத்தில் பளீர் என்று அறைந்தது.தான் வெகு நேரம் தூங்கிவிட்டதை உணர்ந்தான்.
குளியல் அறைக்கு விரைந்து சென்றான்.தன்னிடம் இருந்த சிறந்த ஆடையை அணிந்து கொண்டு வெளியே வந்தான்.
வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருந்தது.
அரசர்களும் அரச குமரர்களும் ஒவ்வொருவராக வர துவங்கினர்.
அவர்களை நேரில் சென்று மங்கள வாத்தியங்கள் முழங்க வரவேற்றான் பார்த்திபன்.வந்தவர்களுக்கு குடிப்பதர்கு மோரும் உண்ண இனிப்பு பண்டங்களும் வழங்கப்பட்டது.ஒரு மணி நேரத்திற்குள் அனைவரும் வந்துவிட்டனர்.அவர்களை மூன்று வரிசையில் அமர்த்தி இருந்தான் பார்த்திபன்.முதல் வரிசியில் அமர்ந்து இருந்தவர்கள் பார்த்திபன் கொடுக்கும் பரிசு பொருள்களை விட அதிகமாக எதிர்பார்பவர்கள் அமர்ந்து இருந்தனர்.இரண்டாம் வரிசையில் இருந்த்வர்கள் பார்த்திபன் அளிக்கும் பரிசு பொருளே போதும் என்று எண்ணுபவர்கள்.
மூன்றாம் வரிசையில் பரிசு பொருள் எதுவும் வேண்டாம் சம்யுக்தை மட்டும் போதும் என்று நினைப்பவருக்கு போடப்பட்டு இருந்தது.ஆனால் அந்த வரிசை காலியாக இருந்தது.யாரும் அதில் அமரவில்லை.வந்தவர்கள் கலை நிகழ்ச்சியை கண்டு கழித்துக் கொண்டு இருந்தனர்.பார்த்திபன் சம்யுக்தை அறைக்கு சென்றான்.தோழிகள் அவளுக்கு ஆபரணங்களை அணிவித்துக் கொண்டு இருந்தனர்.
அவன் வாங்கி தந்த சேலையில் அவள் ஒரு தேவதையை போலவே காட்சி அளித்தாள்.அவள் அழகில் சற்று தடுமாறி தான் போனான் பார்த்திபன்.
"வெகுவாக வேலையை முடிங்கள் சுயம்வரம் சற்று நேரத்தில் துவங்கிவிடும்"என்று கூறி அவளை பார்த்தான்.அவள் தலை குனிந்து இருந்தது.மிகுந்த மனகவலையில் இருந்தாள்.
YOU ARE READING
மாவீரன் பார்த்திபன்
Historical Fictionஇது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.