அத்தியாயம் 2

9.8K 301 39
                                    

அது முத்துவிலாஸ்,நகரின் மையத்தில் இருக்கும் வீடு, அந்த காலத்தில் வாங்கி கட்டியதால் வீடு தோட்டம் என்று விரிந்து நின்றது அந்த வீடு. ரிட்டயர்டு ஐஏஎஸ் ஆபீஸர் முத்துகுமரனின் இல்லம். அடுத்து டாகடர் ஹேமாமலினி சுக்விந்தர் சிங், நகரின் தேர்ந்த ஆர்த்தோ சர்ஜன், முத்துகுமரனின் தங்கை. ஆர்மியில் வேலை பார்த்தவர். அங்கேயே சிங்கை கல்யாணம் முடித்து ஒரே ஒரு பெண் ஜஸ்மீத் சிங்கை கணவனின் தங்கை மகனுக்கே கட்டி கொடுத்திருந்தாள். கணவர் இறக்கவும் சென்னையில் தனியாக மகனுடன் வசிக்கும் அண்ணன் வீட்டிற்கு வந்து ஹாஸ்பிட்டல் நிர்மாணித்து நடத்தி கொண்டிருக்கிறாள்.அடுத்து வீட்டின் அதிமுக்கியமான ஆள் சக்திவேல் ஐபீஎஸ், சென்னை சவுத் சோன் அசிஸ்டண்ட் கமிஷ்னர். 29 வயது,ஆறடியில் மிடுக்கான அழகன் அளந்து எடுத்த மீசையுடன் எலுமிச்சை நிறம். வேலையில் கில்லி, ரொம்பவும் புத்திசாலி.பெண்களிடம் மட்டும் ஏனோ அவனுக்கு பேசுவதில் பெரிய ஈர்ப்பும் இல்லை, தேடி வந்து பேசும் பெண்களையும் தள்ளியே வைத்திருப்பான். அதனால் இதுவரை காதல் என்பது அவன் வாழ்க்கையில் கண்மூடிய நேரத்தில் கூட வந்ததில்லை.மிச்சம் அந்த வீட்டில் சமையல்காரி சுந்தரி, ஆர்டின்ன்ஸ் அழகுவேல் தோட்டம் பார்க்க என எந்த நேரமும் எல்லோரும் அவரவர் வேலையில் முனைப்பாகவே இருப்பார்கள்.

தடதடவென படியில் இறங்கி வந்த அண்ணன் மகனை பார்த்து, "சக்தி நீ எப்போ வந்தே?"

"மார்னிங் அத்தே..ரெண்டு மணி.." என்றபடி டயனிங்கில் உட்கார்ந்தான் சக்தி.

"அப்ப ட்யூட்டிக்கு கொஞ்ச லேட்டா போகலாம்ல" என்றவள் இட்லியை சக்தி தட்டில் வைத்தபடி. உள்ளே கிச்சன் பக்கம் திரும்பி "சுந்தரி, ஆம்லெட் போடு , சக்தி சாப்பிட வந்திட்டான்" என்றாள்.

"நேத்து ஒரு அக்யூஸ்ட புடிச்சோம் அத்தே, அவனை இன்னிக்கு கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணி ரிமேண்ட் பண்ணனும் அதான் கிளம்பிட்டேன். ஆமா அப்பா எங்கே?" என்றான் இட்லியை சாப்பிட்டபடி.

"இன்னும் வாக்கிங் முடிச்சு வரலை"என்றவள் தானும் சாப்பிட ஆரம்பித்தாள்.

காவலே காதலாய்...Where stories live. Discover now