அடுத்த 6 மணி நேரத்தில், வென்டிலேடர் அகற்றபட்டு, ட்ரிப்ஸூடன் ரூமிற்கு மாற்றப்பட்டாள் சுமித்ரா. வந்ததில் இருந்து அரை நொடி கூட அவளை விட்டு அகலாமல் இருந்தான் சக்தி. முகமெல்லாம் அசதியிலும் அழுகையிலும் வீங்கி போயிருந்தது. சுமிக்கு இட்டிருந்த ட்ரிப்ஸ் முடிய இருந்தது. நர்ஸ், "சார், மேம் இன்னொரு ட்ரிப்ஸ் போட சொல்லிருக்காங்க, கொஞ்சம் வாங்கிட்டு வந்துடுறீங்களா?" என்றாள் தயங்கியபடி.
ட்ரிப்ஸை ஒரு பார்வை பார்த்தவன், சுமித்ராவை பார்த்து மெலிதாய் சிரித்து விட்டு உச்சி முகர்ந்தான் " இப்ப வந்திடுறேன்..ம்" என்றவன் அங்கிருந்த நர்ஸிடம் "இங்கேயே இருங்க ப்ளீஸ்" என்றுவிட்டு போனான்.
அவன் போவதையே பார்த்து கொண்டிருந்தாள் சுமித்ரா.
சுமியை பார்க்க மூர்த்தியும்,செவ்வந்தியும் வந்தார்கள்."அம்மா அப்பா" என்றாள் சுமி.
"சாமி, உன் வாயிலே இத கேட்டிட மாட்டோமான்னு இருந்துச்சி சுமி..கடவுளே.." என்று சாமி கும்பிட்டாள் செவ்வந்தி.
மெலிதாய் சிரித்தாள் சுமி. "புள்ளய இன்னும் கொடுக்கலியா சுமி" என்றாள் செவ்வந்தி.
"இல்லம்மா, இன்னும் ஒரு பாட்டில் ட்ரிப்ஸ் இருக்கு, அப்புறம் தான் கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்ற சுமி "நீங்க பார்த்துடீங்களாம்மா, யாரு மாதிரி இருக்கான்?". என்றாள் ஆவலாய்.
"நான் போய் பார்த்திட்டு வந்து சொல்லுறேன் சுமி" என்றவள் சற்று வேறு பேச்சு பேசிவிட்டு வெளியே வந்தாள்.அவள் பின்னே சிறிது நேரத்தில் மூர்த்தியும் வெளியே வந்தார்.
சக்தி ட்ரிப்ஸை வாங்கி வரவும், நர்ஸ் அதை போட்டுவிட்டு நர்ஸ் வெளியே சென்றாள்.ஒரு நீண்ட பெரு மூச்சுடன் அவள் அருகில் அமர்ந்தவன், அவள் தலையை கோதியபடி. அவளையே பார்த்தான்.
"உன்ன ரொம்ப அலற விட்டுட்டேன் இல்ல சக்தி?" என்றாள் அவள்.
"ம்..ரொம்ப " என்று வறட்சியாய் சிரித்தான் அவன்.
ESTÁS LEYENDO
காவலே காதலாய்...
Ficción Generalபேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்...