அத்தியாயம் 13

11.5K 321 62
                                    

விடிந்தது மணி 6 , சக்தி மெதுவாய் கண்ணை திறந்தான். சுமித்ரா அந்த அறையில் கண்ணாடி முன் தனக்கு தானே சிரித்தபடி பட்டு சேலை பளபளப்பில் தலையை பின்னிக் கொண்டிருந்தாள்,

"டயம் என்ன?" என்றான் சக்தி.

"ம்" என்று நினைவு வந்தவளாய் "மணி 6 ஆச்சு, நீங்க சீக்கிரம் கிளம்புங்க, உங்க ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் கூப்பிட்டாங்க" திரும்பாமல் கண்ணாடியிலே அவனை பார்த்தபடி.

ம்ஹூம்.. என்று எழுந்து நெட்டி முறித்தவன்.

"இடியட் கல்யாணத்தை ஊருக்குள்ளே வச்சிட்டு, ரூமை ஊருக்கு வெளியே போட்டுட்டான்" என்றபடி எழுந்தவன் பாத்ரூம் சென்று குளித்து டவலை சுற்றிக் கொண்டு வெளியே வந்தான்.

"இங்க இருந்து போக ஒரு 20 மினிட்ஸ் ஆகாது, சீக்கிரம்" என்றாள்.

"ம்ச்..போன அங்க முகூர்த்தத்துக்கு அச்சதை போடலாம், இல்லாட்டி இங்கேயே முகூர்த்தம் தான்" என்று இழுத்து தன்னோடு கட்டிக் கொண்டு கண்ணடித்தான்.

"ம்ச்..கிளம்புங்க.." என்ற சுமித்ரா கண்ணில் காதல் பொங்கியபடி சக்தியின் கண்ணில் ஏதோ தேடினாள்.

கதவு தட்டும் சத்த்த்துடன் மேடம் டீ என்றான் பேரர்.

அவனிடம் இருந்து விலகி கதவை திறந்து டீ வாங்கிக் கொண்டு தேங்க்ஸ் சொல்லி அவனை அனுப்பிவிட்டு டீ என்று சக்தியிடம் நீட்டினாள்.

அதற்குள் பட்டு வேஷ்டியில் மாறியிருந்தவன் "ம்" என்றபடி டீயை ஒரு கையில் வாங்கிக் கொண்டு மறுகையில் அவளை இடுப்போடு இழுத்து அணைத்து "மித்தூ யூவார் ஆஸம், ஐ யம் அடிக்டட்" என்றான் அவளை பார்த்து.

சுமித்ராவிற்கு ஏனோ பூரிப்பாய் இருந்தது, வெட்க சிரிப்புடன் அவனை விட்டு விலகினாள்.

சில நிமிடங்களில் அவன் தயராகவும் அவர்கள் அங்கிருந்து கிளம்பி மண்டபம் போகும் வழியில், சட்டென ஒரு இடத்தில் "நிறுத்துங்க நிறுத்துங்க ப்ளீஸ்" என்றாள் சுமி.

சடன் ப்ரேக் போட்டவன் "என்ன?" என்றான்.

"பூ" என்றவள் "ஸ்..பர்ஸ்..ம்ச்.." என்று தலையில் கைவைத்தபடி சட்டென திரும்பி அவன் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு பணம் எடுத்து கொண்டு காரில் இருந்து இறங்கினாள். சுமி எடுத்த கொண்டு உரிமை, அவளின் புது உற்சாகம் வியப்பாய் இருந்தது சக்திக்கு. கண்ணாடி வழியாக பூவை வாங்கிக் கொண்டு தலையில் வைத்தபடி வந்ததை பார்த்தான்.

காவலே காதலாய்...Où les histoires vivent. Découvrez maintenant