அடுத்த ரெண்டாவது சுமித்ரா கூறியபடி முத்துவிலாஸ் வந்து சேர்ந்தாள். ஹேமாவும் ஜாஸூம் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார்கள்.சக்தி எழுந்திரிப்பதற்குள் சுமித்ரா அந்த வீட்டில் கலந்து போயிந்திருந்தாள்.சக்தி காலையில் எழுந்திரிக்கவும், சைட் டேபிளில் சுமி வைக்கும் இடத்தில் டீ இருந்தது. டீயை எடுத்து கொண்டு மாடியில் இருந்து எட்டிப் பார்த்தான். சுமியின் சத்தம் கேட்டது,கடுப்புடன் டீயோடு கீழே இறங்கி வந்தவன் ஹாலிற்கு காலை வைக்கவும் முத்துகுமரன் வீட்டிற்குள் வரவும் சரியாக இருந்தது.
"அடடே சுமித்ரா எப்பம்மா வந்தே?" என்றார் சந்தோஷமாக
"நீ எதுக்கு இங்க வந்தே?" என்றான் சக்தி வேகமாக.அவன் அப்பாவும் , ஹேமாவும் அதிர்ந்து போயினர்.
"என்ன சக்தி என்ன பேசுறே? மொதமொதல்ல புள்ள உண்டாகி வந்திருக்கா.ஏன் வந்தேன்னு கேட்கிறே?" என்றார் கண்டிக்கும் தொனியில்.சக்தி , சுமித்ராவை முறைத்து பார்த்தான்.
சுமித்ரா அலட்டாமல் "ம்ச்.. அது மாமா அவரு வந்து கூப்பிட்டப்போ நான் வரமாட்டேன் சொன்னேன்னா..அதான் கோவம்..அதெல்லாம் நான் சமாளிச்சுக்வேன் மாமா நீங்க வொர்ரி பண்ணாதீங்க" என்றவள் "டீ குடிச்சிட்டீங்களா? கப்பை குடுத்திட்டு ஜிம்க்கு போங்க" என்றாள் சக்தியிடம் நக்கலாக.
"என்னம்மோ போங்க..கொஞ்சம் கூட இந்த காலத்து பசங்களுக்கு சீரியஸ்னெஸ்ஸே இல்ல..சக்தி இங்க பாரு இனிமே சுமியை ஒழுங்க பார்த்துக்கணும்..இப்பிடி விட்டேத்தியா எல்லாம் இருக்காதே" என்றார் அப்பா.
என்ன பேசுவது என்று தெரியாமல் சுமியை ஒரு முறை முறைத்துவிட்டு ஜிம் ரூமிற்குள் சென்று புகுந்து கொண்டான்.
அண்ணன் குளிக்க செல்லவும் ஹேமா சுமியிடம்,"ஆமா , இப்ப சமாளிச்சிட்டே..ரூமிலே என்ன பண்ணுவே? ஆனாலும் நீ பேசுனது தப்புதான்..ருத்ர தாண்டவம் அன்னிக்கே ஆடுனான்..இனி?!!" என்று மலைத்தாள்."நான் போலீஸ் குவார்டர்ஸ்ல இருந்து ரெண்டு நாள் நல்லா ட்ரையினிங் எடுத்துட்டு வந்திருக்கேன்..இந்த போலீஸை என்ன பாடுபடுத்துறேன்னு பாருங்க..வேணும்ணா உங்க அண்ணன் பையனுக்காக வேணா வேண்டிக்கோங்க" என்று கண்ணடித்தாள் சுமித்ரா.
DU LIEST GERADE
காவலே காதலாய்...
Aktuelle Literaturபேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்...